மருத்துவர் தின நல்வாழ்த்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்

உயிர்காக்கும் மருத்துவர்களின் கடமையை பாராட்டி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்த நாளான ஜூலை மாதம் முதல் நாள் மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று பரவாமல் காத்திட இந்நாளில் நாடு முழுவதும் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர்களின் பணியினை நாடே போற்றிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை முதல்வர் இறைவனுக்கு நிகராக கருதுவதாக தெரிவித்துள்ளார்.
நேரம் காலம் பார்க்காமல், தன்னலம் கருதாமல், ஓய்வின்றி உழைக்கக் கூடியவர்கள் நம்முடைய மருத்துவர்கள். இந்த பேரிடர் நோய்த் தொற்று காலத்தில், கடமை தவறாமல் கண்ணியத்துடனும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும்
மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை.

மருத்துவர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசு மகத்தான
பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு எப்போதுமே துணை நிற்கும் என்பதையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக் கொண்டார்.

மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் வாழ்வு சிறக்கட்டும் என இத்தருணத்தில் வாழ்த்துவதோடு, இந்த நன்னாளில் மருத்துவர்களை நாம் நினைவு கூர்ந்து வாழ்த்தி, அவர்களுடைய பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொண்டார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …