கொவிட்-19 குறித்த அண்மைத்தகவல்கள்


மத்திய அரசு விநியோகித்த வென்டிலேட்டர்களில், பைலெவல் பாசிட்டிவ் ஏர்வே ப்ரெஷர் எனப்படும் இரண்டு வேறுபட்ட அழுத்தங்களை பராமரிக்கும் வசதி இல்லை என்று சில ஊடகங்களில் வந்துள்ள செய்திகள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளன. 

மாநிலங்கள் மற்றும் தில்லி தலைநகர பிராந்தியம் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் விநியோகிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” வென்டிலேட்டர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுக்கானவை. கொவிட் வென்டிலேட்டர்களுக்கான தொழில்நுட்ப தரநிலைகளை, இந்த அமைச்சகத்தின் சுகாதாரப் பணிகளுக்கான தலைமை இயக்குநர் தலைமையிலான வல்லுநர்கள் அடங்கிய தொழில்நுட்பக் குழு நிர்ணயித்தது. அதன்படி வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன. வாங்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் இந்த தரநிலைகளின்படிதான் உள்ளன. 

    மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்ட, பெல் மற்றும் அக்வா வென்டிலேட்டர் மாதிரிகள், வல்லுநர் குழுவின் தரநிலைகளின்படிதான் இருக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, சிக்கன விலையிலான வென்டிலேட்டர்களில் இருவேறு அழுத்தத்தை நிர்ணயிக்கும் வசதி, தொழில்நுட்ப தரநிலைகளின்படி உள்ளது. வென்டிலேட்டர்கள், பயன்பாட்டாளர்களுக்கான கையேடு மற்றும் உபகரணத்தைப் பற்றிய கருத்தறியும் படிவங்களுடன் அளிக்கப்பட்டுள்ளன. ஏதேனும், ஐயம் இருப்பின், இவற்றைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

PDATES ON COVID-19

It has come to the notice of the Ministry of Health and Family Welfare (MoHFW) through some media reports that the issue of Bilevel Positive Airway Pressure (BiPAP) mode not being available in the ventilators supplied by Government of India has been raised.

The “Make in India” ventilators supplied to the States and UTs, including GNCT of Delhi, by the Ministry of Health and Family Welfare are meant for ICUs. The technical specifications for these COVID ventilators have been laid down by a Technical Committee of domain knowledge experts headed by the Director General Health Services (DGHS), MoHFW against which the ventilators have been procured and supplied. The ventilators procured and supplied comply with these specifications.

Ventilator models BEL and AgVa supplied to the States/ UTs are complying with the requirements as per the specifications laid down by the Technical Committee. These cost effective, made in India ventilators have BiPAP mode and other such modes as have been prescribed in the technical specifications. The ventilators are being supplied along with User Manuals and Feedback Forms which must be referred to for clarity.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …