புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் தனிஅலுவலர்கள் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 6 மற்றும் 11-ஆம் தேதியிட்ட மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து மறுசீரமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகியவற்றிலுள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமானது நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகள் அமைத்தல், குறிப்பேடுகளில் திருத்தம் செய்தல், மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவதற்கு அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் இது தொடர்பான மென்பொருள் தயார் செய்தல் போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டுள்ளது.

இதற்கிடையில், திடீரென்று (Covid-19) கொரோனா தொற்று நோய் பரவிவருவதால், மத்திய, மாநில அரசுகளால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு எந்திரம் போர்கால அடிப்படையில் கொரானா நோய் தடுப்பு பணிகள், பாதுகாப்பு பணிகள், மீட்பு மற்றும் நலவாழ்வு பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைகளுக்கிணங்க ஊரக உள்ளாட்சி தேர்தல்களை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றின் தனிஅலுவலர்களின் பதவிக்காலமானது 2020 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 30 ஆம் தேதியன்று முடிவடைகிறது. தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31 ஆம் தேதி வரை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்காக, பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் தொடர்புடைய சட்டங்களை திருத்துவதென அரசானது முடிவு செய்துள்ளது.

அதற்கிணங்கிய வகையில் முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சிய சட்டங்கள் (மூன்றாம் திருத்த) அவசரச் சட்டத்தினை 30.06.2020 அன்று பிறப்பித்துள்ளார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …