பாஜகவின் மாநில துணைத் தலைவராக நயினார் நாகேந்திரன், வி.பி. துரை சாமி நியமனம்- தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவிப்பு.


சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, பாஜகவின் மாநில நிர்வாகிகள் மூன்றாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம் கட்சியின் இந்த முக்கிய நடைமுறையில் பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட முருகனின் பதவி ஏற்ற பிறகு தற்போது நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது, அதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் முருகன் வெளியிட்டார்.

சென்னை உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் L. முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்…

தமிழகத்தில் இயங்கி வரும் அறம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜா, கிரண்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பும் மாநில துணைச் செயலாளர் ஆகியோர் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜக- வில் இணைந்தனர். மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் தான் இணைந்ததாக முருகன் தெரிவித்தார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் , மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். பாஜகவின் மாநில துணைத் தலைவராக நயினார் நாகேந்திரன், வி.பி. துரை சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்தார்.

தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமனம் செய்து கட்சித்தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய சென்னை கிழக்கின் செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் , மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அறம் தொலைக்காட்சி CEO ஸ்ரீதர், பாடலாசிரியர் பா.விஜய், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார், கலை, ஜனனி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்படி மாநில துணை தலைவர்கள் 10 பேர் மாநில பொதுச்செயலாளர் 4 பேர் மாநில செயலாளர்கள் 9 பேர் மாநில பொருளாளர் ஒருவர் இணைப் பொருளாளர் ஒருவர் மாநில அலுவலக செயலாளர் ஒருவர் ஆகிய பொறுப்புகளுக்கு நியமனம்.

மாநில இளைஞர் அணி தலைவராக வினோத் பி.செல்வம் மகளிரணி தலைவர் மீனாட்சி எஸ் சி எஸ்டி அணித்தலைவர்கள் விவசாய அணி, ஓபிசி அணி சிறுபான்மையினர் அணி ஆகிய அணிகளுக்கும் மீனவர் பிரிவு உள்ளிட்ட 18 பிரிவுகள் தலைவர்களும் நியமிக்கப்பட்ட்டுள்ளர்கள்.

மாநிலத் துணைத் தலைவர்களில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி,கே.எஸ்.நரேந்திரன் வானதி சீனிவாசன் முருகானந்தம் எம்.என்.ராஜா, மகாலட்சுமி,கனகசபாபதி, புரட்சி கவிதாசன் ஆகியோர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள் முந்தைய மாதத்தில் திமுகவில் இருந்து வெளியேறிய விபி துரைசாமிக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவி கொடுக்கப் பட்டிருக்கிறார்.
மாநில பொதுச்செயலாளராக கே.டி.ராகவன் ஜி.கே செல்வகுமார் மதுரை பேராசிரியர் சீனிவாசன், கரு.நாகராஜன் ஆகியோர் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.

மாநில பொருளாளராக எஸ் ஆர் சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் இளைஞரணி தலைவராக மீண்டும் வினோத் பி.செல்வம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இவை தவிர 18 பிரிவு தலைவர் களில் அண்மையில் பாஜகவில் இணைந்த பால்கனகராஜ் வழக்கறிஞர் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சாத்தான்குளம் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குற்றம் செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மவ்லும் அரசு சிபிசிஐடிக்கு மாத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் இந்த வழக்கில் நடவடிக்கையை துரித படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எல்லா விஷயத்திலும் அரசியல் செய்து வருகிறார் என குற்றஞ்சாட்டிய அவர், அரசு நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி சீன பொருட்களை பயன்படுத்த கூடாது, முற்றுலுமாக அதனை ஒழிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

மாநில துணை தலைவர்கள்

  1. M. சக்கரவர்த்தி- மத்திய சென்னை மேற்கு
  2. நைனார் நாகேந்திரன் Ex.MLA திருநெல்வேலி
  3. V.P. துரைசாமி Ex MLA நாமக்கல்
  4. K.S. நரேந்திரன் கிருஷ்ணகிரி மேற்கு
  5. வானதி ஸ்ரீனிவாசன் கோயம்புத்தூர் நகர்
  6. M. முருகானந்தம் திருவாரூர்
  7. M.N. ராஜா சென்னை கிழக்கு
  8. A.R. மஹாலக்ஷ்மி மதுரை நகர்
  9. Dr.Prof . கனக சபாபதி கோயம்புத்தூர் வடக்கு
  10. திரு புரட்சிக்கவிதாசன் புதுக்கோட்டை

மாநில பொது செயலாளர்கள்

  1. K.T. இராகவன் செங்கல்பட்டு
  2. G.K. செல்வகுமார் கோயம்புத்தூர் நகர்
  3. Prof.R. சீனிவாசன் மதுரை புறநகர்
  4. கரு நாகராஜன் சென்னை கிழக்கு

மாநில செயலாளர்கள்

  1. K. சண்முகராஜ் இராமநாதபுரம்
  2. டால்பின் ஸ்ரீதர் தென் சென்னை
  3. ப.வரதராஜன் நாகப்பட்டினம்
  4. A. பாஸ்கர் EX.MLA தருமபுரி
  5. R. உமாரதி கன்னியாகுமரி
  6. D. மலர்கொடி திருப்பூர் வடக்கு
  7. P. கார்த்தியாயினி Ex.Mayor வேலூர்
  8. பார்வதி நடராஜன் திருச்சி நகர்
  9. சுமதி வெங்கடேஷ் மத்திய சென்னை

மாநில பொருளாளர்

  1. S.R. சேகர் கோயம்புத்தூர் நகர் இணை பொருளாளர்
  2. சிவ சுப்பிரமணியன் பெரம்பலூர் மாநில

அலுவலக செயலாளர்

  1. M. சந்திரன் மத்திய சென்னை மாநில தலைமை அலுவலகம் : ” கமலாலயம் ” ,

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் செயப்படுகின்றது.

  1. திருச்சி புறநகர் S. ராஜேந்திரன்
  2. கடலூர் கிழக்கு
  3. சேலம் மேற்கு G. மணிகண்டன்
    S. சுதிர் முருகன் N. வசந்தராஜன்
  4. கோயம்புத்தூர் தெற்கு
  5. நீலகிரி H. மோகன்ராஜ்
திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …