சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதில் உணவுப் பொருளாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு


சத்துணவு மற்றும் சமூக நலத்துறை, சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு, மதிய உணவுக்குப் பதில் உணவுப் பொருளாக வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மே மாதத்திற்கான சத்துணவை உளர் உணவாக, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுபொருட்களை மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி 23,71,316 நடுநிலை பள்ளி மாணவர்கள், உயர் நிலை பள்ளி மாணவர்கள் 18,89,808 ஆக மொத்தம் 42,61,124 மாணவர்களுக்கு மே மாதத்திற்கான சத்துணவை உளர் உணவாக அளிக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தற்போது கரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாப்பதிலும், ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் ஆரோக்கியமான உணவு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டுமென்று இந்த நடவடிக்கை அரசு மேற்கொண்டு உள்ளது.

இதற்காக 16138.69 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 5207.84 மெட்ரிக் பருப்பு கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த அரசி, பருப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் உளர் உணவு பொருட்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியர் விளம்பரப்படுத்தி மாணவர்கள் பெற்று செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …