அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு 5 மண்டலங்களாக மாற்றியமைத்து அதிமுக தகைமைக்கழகம் உத்தரவு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு

அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை என 5 மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மண்டலங்களுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள்

1, சென்னை மண்டலம்
திரு. அஸ்பயர் K. சுவாமிநாதன், M.B.A., அவர்கள் (தியாகராயநகர், தென் சென்னை வடக்கு மாவட்டம்)

2, வேலூர் மண்டலம்
திரு. M. கோவை சத்யன், PGDM., அவர்கள்
(கழக செய்தித் தொடர்பாளர்)

3, கோவை மண்டலம்
திரு. சிங்கை G, ராமச்சந்திரன், B.E., M.B.A., அவர்கள் (சிங்காநல்லூர் தொகுதி, கோவை மாநகர் மாவட்டம்)

4,, திருச்சி மண்டலம்
திரு. B, வினுபாலன், B.Tech., அவர்கள்
(தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் )

5, மதுரை மண்டலம்
திரு. V.V.R. ராஜ்சத்யன், BSCIS) அவர்கள்
(பழைய விளாச்சேரி சாலை, மதுரை)

மேற்காணும் மண்டலங்களுக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும், என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …