கர்நாடக ஆஷா: ஒரு சமூக சுகாதார ஆர்வலரின் உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறது


அன்னபூர்ணா, கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் துங்கநகரில் பணிபுரியும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஆர்வலர் (ஆஷா)ஆவார்குடிசைப் பகுதியில்3000மக்கள் தொகையை உள்ளடக்கிய பகுதியில் உள்ளவர்களுக்காக,2015முதல்தேசிய சுகாதாரப் பணியின் ஒரு பகுதியாக நகர்ப்புற ஆஷா அறிமுகப்படுத்தப்பட்டதில் அங்கு பணியாற்றி வருகிறார்கோவிட் – 19 கட்டுபடுத்துதல்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவரது முக்கியப் பணிகளில் ஒன்று வீட்டு கணக்கெடுப்புகளை நடத்துவதாகும்.

கோவிட் -19 ஐ எதிர்ப்பதில் மாநிலத்தின் வெற்றியில் கர்நாடகாவின் 42,000ஆஷாக்கள் ஒரு முக்கியமான தூணாக உருவெடுத்துள்ளனர்அவர்கள் கோவிட் – 19 நோய் தொற்றுவீட்டுக் கணக்கெடுப்புகளில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்மேலும் கோவிட் – 19 அறிகுறிகளுக்காக மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள்புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நோய் சார்ந்த அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனையிடுகின்றனர்.குறிப்பிட்ட மக்களிடையே கோவிட் -19நோய் தொற்று  அதிகரித்த பாதிப்பை உணர்ந்துகணக்கெடுப்பில் வயதானவர்களின் வீடுகளை அடையாளம் கண்டதுடன்அவர்களில் இணை நோயுள்ளவர்களையும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி இல்லாது தனித்து வாழ்ந்தவர்கள் உள்ளிட்ட சுமார் 1.59கோடி குடும்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.ஆஷாக்கள் தங்கள் பகுதியில் இதுபோன்ற அதிக ஆபத்தில் உள்ளவர்களைஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஒரு நாளைக்கு ஒரு முறைஎன்றும் மற்ற பகுதிகளில் 15நாட்களுக்கு ஒரு முறை என அவர்கள் கண்காணிக்கும் கால இடைவெளி மாறுபடும். சளியுடன் காய்ச்சல், கடுமையான சுவாச பிரச்சனைகள் அறிகுறிகள் உள்ளதாக கூறும் நபர்களின் வீடுகளையும்மாநில சுகாதாரத் துறை உதவி எண்களை அழைத்த அதிக ஆபத்துள்ள நபர்களின் வீடுகளையும் அவர்கள் பார்வையிடுகிறார்கள்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …