2020 அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் மற்றும் அனுமதி விதிமுறைகள் குறித்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன


நாடு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, 1989 மத்திய மோட்டார் வாகன விதிமுறைகளின் கீழ், தேசிய அனுமதி வழங்குவதற்கான திருத்தம் தொடர்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேசிய அனுமதி பரிபாலன முறையின் கீழ், சரக்கு வாகனப் போக்குவரத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களையும் தடையின்றி இயக்கும் வகையில், அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன் பயனாக, ‘’ அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் மற்றும் அனுமதி விதிகள் 2020’’ என்ற பெயரில் வழங்கப்படும் புதிய விதிமுறைகள், ஜிஎஸ்ஆர் 425 (இ) 2020 ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு புறம், நாட்டிலுள்ள மாநிலங்களில் சுற்றுலாவை நீண்டகால அடிப்படையில் மேம்படுத்துவதுடன், மாநில அரசுகளின் வருவாயைப் பெருக்குவதற்கு இந்த விதிமுறைகள் உதவும். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அது தொடர்பானவர்களின் ஆலோசனைகளை அறிவதற்காக இது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயம், 39-வது போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இதற்கு, கூட்டத்தில் பங்கேற்ற மாநில அரசுகளின் பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ், சுற்றுலா வாகனங்களை இயக்குபவர் யாராக இருந்தாலும், அவர்கள் ஆன்லைன் மூலம் ‘’ அகில இந்திய சுற்றுலா அங்கீகாரம்/ அனுமதி’’-க்கு விண்ணப்பிக்கலாம். வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் பொருத்தமானதாக உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்ட பின்னர், இந்த அங்கீகாரம்/ அனுமதி வழங்கப்படும். விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்ட 30 நாட்களுக்குள், தேசிய அளவிலான கட்டணம் செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பதாரரின் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில், இக்கட்டணம் செலுத்தப்படலாம்.

மேலும், அங்கீகாரம்/ அனுமதி மூன்று மாத காலத்துக்கு அல்லது அதன் மடங்காக, ஒரே சமயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் நீட்டிப்பு செல்லுபடியாகும் வகையில் இத்திட்டம் நீக்குப்போக்கு கொண்டதாக இருக்கும். நாட்டில் குறிப்பிட்ட பருவத்துக்கு மட்டும் சுற்றுலா மேற்கொள்ளப்படும் பகுதிகள், சுற்றுலா இயக்குபவர்களின் நிதித் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் திருத்தத்துக்கு வகை செயப்பட்டுள்ளது.

மத்திய தரவு தளம், அனைத்து அங்கீகாரம்/அனுமதிகளுக்கான கட்டணம் ஆகியவை இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். இந்தப்பதிவுகள் மூலம், சுற்றுலா இயக்கங்கள், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள், சுற்றுலா மேம்பாடு, வருவாய் அதிகரிப்பு ஆகியவை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

தற்போது உள்ள அனுமதிகள் அனைத்தும் ஏற்கனவே உள்ள அதன் கால அளவுக்கு தொடர்ந்து செல்லுபடியாகும்.

கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகளில் நம் நாட்டின் பயணம் மற்றும் சுற்றுலா தொழில் பல மடங்கு வளர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பங்களிப்பே இந்த வளர்ச்சிக்கு காரணமாகும். இவ்வகையில், நுகர்வோர் அனுபவம் மற்றும் உயர் எதிர்பார்ப்புக்கான போக்கு இதில் காணப்படுகிறது.

COMMENTS INVITED ON ALL INDIA TOURIST VEHICLES AUTHORIZATION AND PERMIT RULES, 2020

New Rules proposed to promote tourism across the country, and enhance revenue of the States

The Ministry of Road Transport and Highways has issued a notification for amendment to National Permit regime under the Central Motor Vehicles Rules 1989 for promoting tourism across the country. The Ministry is in the pursuit of providing seamless movement to the tourist passenger vehicles after the success of goods carriage vehicle under National Permit Regime. This motive has culminated into a new set of rules, which henceforth will be known as, “All India Tourist Vehicles Authorization and Permit Rules, 2020”  published vide GSR 425( E) dated 01 July 2020 for public and stakeholders consultation, which shall go a long way in promoting tourism across the States in our country on one side, while enhancing the revenue of State Governments. The same was discussed in the 39Th Transport Development Council Meeting and was appreciated and concurred by the state participants. 

Under this new scheme, any tourist vehicle operator may apply for an “All India Tourist Authorization/Permit” through online mode. All such authorizations/permits shall be issued, after all relevant documents submitted as stipulated in the rules and due nationwide fees deposited towards such authorization/permit, within 30 days of submission of such applications, subject to all compliances being met by such an applicant as one stop solution.

Moreover, the scheme entails flexibility in the form of authorization/permit being granted, as the case may be, and shall be valid for a period of three months or its multiples thereof not exceeding three years at a time. This provision has been incorporated keeping in mind those areas of our country where there is a limited season of tourism and also for those operators who have limited financial capacity.

This scheme will render consolidation of a central database and fees of all such authorization/permits, which might give a sense of tourist movements, scope of improvement, promotion of tourism and help increase revenues generated through such registrations.

All existing permits shall continue to be in force during their validity.

Travel and tourism industry in our country have increased manifold in last ten-fifteen years. The growth has been contributed by both domestic and international tourists, and there is a trend of high expectation and consumer experience.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …