உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்றுக்கு இடையே, புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் உரை.


உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் பெருந்தொற்று அழித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன என குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார். மக்கள் மகிழ்ச்சியைக் காண, பேராசை, வெறுப்புணர்வு, வன்முறை, பொறாமை மற்றும் பல தீய குணங்களைக் கைவிட வேண்டும் என்று புத்த பகவான் கேட்டுக்கொண்டார். இந்த போதனைக்கு மாறாக, கவலை ஏதுமற்ற வேட்டை உணர்வுடன் மனித குலம் அதே பழைய வன்முறையைக் கையாண்டு, இயற்கையை அவமதிக்கிறது. கொரோனா தொற்றின் வீரியம் குறையத்  துவங்கும் போது, நம் முன்பு மிகத் தீவிரமான பருவநிலை மாற்றம் என்னும் சவால் இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இன்று ( ஜூலை 4,2020) தர்ம சக்ரா தினத்தை ஒட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில், சர்வதேச பௌத்தக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் குடியரசுதலைவர் உரையாற்றினார்.

இந்தியா தர்மம் தோன்றிய பூமி என்ற பெருமையைக் கொண்டது என குடியரசு தலைவர் கூறினார். இந்தியாவில், பௌத்தத்தை கம்பீரமான உண்மையின் புதிய வெளிப்பாடாக நாம் காண்கிறோம். புத்தபகவான் ஞானம் பெற்ற பின்னர் 40 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் போதித்த நன்னெறிகள் அனைத்தும், இந்தியாவின் பாரம்பரியம், ஆன்மிகப் பன்முகத்தன்மை, தாராள அறிவுமயமாக்கம் ஆகிய வழிகளிலேயே இருந்தது. நவீன யுகத்தில், மகாத்மா காந்தி, பாபாசாகிப் அம்பேத்கர் ஆகிய இரண்டு மிகச்சிறந்த இந்தியர்கள், புத்தரின் பொன்மொழிகளால் ஈர்க்கப்பட்டு, நாட்டின் தலைவிதிக்கு வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அவர்களது காலடித் தடத்தில், உன்னதமான பாதையில் செல்லுமாறு புத்தர் விடுத்த அழைப்பை ஏற்று நாம் அதன்படி நடக்க முயல வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். குறுகிய காலத்திலும், நீண்ட நெடுங்காலத்திலும் உலகம் பெரும் பாதிப்பைக் கண்டு வருகிறது. தீவிர அழுத்தம் காரணமாக ஏற்படும் கொடுஞ் செயல்களில் இருந்து தப்பிக்க புத்தபகவானைச் சரணடைந்த ஏராளமான மன்னர்கள் மற்றும் செல்வந்தர்களின் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். புத்தரின் வாழ்க்கையே முந்தைய நம்பிக்கைகளை சவாலாக எடுத்துக் கொண்டதுதான். ஏனெனில், இந்த முறையற்ற உலகத்தின் மத்தியில் துன்பங்களிலிருந்து விடுபடும் வழியைக் காண முடியும் என அவர் நம்பினார்.

குடியரசு தலைவரின் உரைக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to read the President’s address

AS THE PANDEMIC RAVAGES HUMAN LIVES AND ECONOMIES ACROSS THE GLOBE, THE BUDDHA’S MESSAGE SERVES LIKE A BEACON, SAYS PRESIDENT

The President of India, Shri Ram Nath Kovind said that as the pandemic ravages human lives and economies across the globe, the Buddha’s message serves like a beacon. Lord Buddha advised people to shun greed, hatred, violence, jealousy and many other vices to find happiness. Contrast this message with the hankering of an unrepentant mankind indulging in the same old violence and degradation of nature. We all know that the moment the virulence of Coronavirus slows down, we have a far more serious challenge of climate change before us. 

The President was speaking at a virtual event organized by the International Buddhist Confederation on the occasion of the Dharma Chakra Diwas at Rashtrapati Bhavan today (July 4, 2020). 

The President said that India is proud of being the land of the origin of the Dhamma. In India, we see Buddhism as a fresh expression of the sublime truth. Lord Buddha’s enlightenment, and the subsequent preaching by him for over four decades, were in line with India’s tradition of respect for intellectual liberalism and spiritual diversity. In modern times, two exceptionally great Indians – Mahatma Gandhi and Babasaheb Ambedkar – found inspiration in the words of the Buddha and went on to shape the destiny of the nation. 

The President said that following in their footsteps, we should strive to hear the call of the Buddha, to respond to his invitation to walk the Noble Path. The world seems full of suffering, in short term as well as in long term. There are many stories of kings and affluent people suffering from acute depression who took refuge in the Buddha to escape cruelties of life. Indeed, the life of the Buddha challenges earlier convictions as he believed in finding a deliverance from suffering in the midst of this imperfect world. 

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …