திரும்பி வா, தென்றலே! (ஆர். சுமதி)

கணவனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வரும் பெண், அந்த கணமே அவனுடைய அன்பை உணர்ந்து மீண்டும் திரும்பி ஓடுவதைப் போலவே அலைகள் கரையைத் தொட்டுப் பார்த்த படி கடலுக்கே சென்றன. அலைகளைப் பார்க்கும்பொழுது தனக்குள் தோன்றும் கற்பனையை நினைத்துச் சிரித்தான், வசந்த். மோகனாவிடம் இந்த உவமையைக் கூறினால், “அடடா நீங்க மட்டும் கவிதை எழுதத் தொடங்கினா பெரிய ஆளா வரலாம்!’ எனக் கிண்டல் செய்திருப்பாள். சிரித்திருப்பாள் அவள் வந்ததும் மறக்காமல் சொல்ல வேண்டும்! ‘சீக்கிரம் வந்துவிடு.. வந்துவிடு!’ என என்னிடம் சொல்லிவிட்டு இன்னும் வரவில்லை. நான் எப்போதாவது தாமதமா வந்தால் எப்படித் திட்டுகிறாள்… வரட்டும்! வசந்த்!

இலவசமாக |  இ – புத்தகம்

https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=888