சங்கமித்திரை(ராஜேஷ்குமார்)

சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட் அந்த விடியற்காலை நான்கு மணிக்கும் லௌஞ்ச் முழுக்க கும்பலோடு இருந்தது. ரன்வேயில் அப்போதுதான் வந்து நின்றிருந்த சிங்கப்பூர் ஃப்ளைட்டிலிருந்து பயணிகள் தூக்கக் கலக்கத்தோடு இறங்கி – தூக்க முடிந்த லக்கேஜ்களோடு வந்து கொண்டிருந்தார்கள். ஒலிபெருக்கியில் ‘வெல்கம்’ சொல்லி பொய்யாய் உபசரித்துக் கொண்டிருந்தாள் ஒரு பணிப்பெண். டாக்டர் தீனதயாளன் விமானப் பயணக் களைப்போடு ‘கஸ்டம்ஸ் செல்’க்குப் பக்கத்தில் வந்து அங்கிருந்த பாலி வினைல் நாற்காலியில் உட்கார்ந்தார். கஸ்டம்ஸ் சோதனைகளை முடித்துக் கொள்ள சின்னதாய் ஒரு க்யூ நின்றிருந்தது. கெளண்ட்டர்களில் பெண்கள் வெள்ளைக் கோட் அணிந்து ‘கஸ்டம்ஸ்’ என்ற வார்த்தையோடு தெரிந்தார்கள். அவர்கள் எதிரில் பயமாய், பவ்யமாய், கலக்கமாய் பயணிகள். டெலிவிஷன் திரைகளில் தோன்றி மேல் நோக்கி நகர்ந்த இளம் பச்சை நிற எழுத்துக்கள். முதுகுக்கு கார்பன் பூசிக் கொண்ட பயணிகளின் விபரங்கள் அடங்கிய பக்கங்கள் வேகமாய்ப் புரட்டப்பட்டன. சில கிழித்து எடுக்கப்பட்டன. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் தீனதயாளன் தன் முதுகை யாரோ தொடுவதை உணர்ந்து திரும்பினார். ஏர்போர்ட் மானேஜர் கெளரி சங்கர் இள நீல நிற யூனிஃபார்மோடு நின்றிருந்தார்.

இலவசமாக |  இ – புத்தகம்

https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1028

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …