ரேசன் பொருட்கள் இலவசம் என்று முதல்வர் அறிவித்த பின்னரும் ரேஷன் பொருட்களுக்கு கட்டாய பண வசூல் செய்வதை ரேசன் கடைகள் உடனே நிறுத்த வேண்டும்!


ரேசன் பொருட்கள் இலவசம் என்று முதல்வர் அறிவித்த பின்னரும் ரேஷன் பொருட்களுக்கு கட்டாய பண வசூல் செய்வதை ரேசன் கடைகள் உடனே நிறுத்த வேண்டும்!
மக்களிடம் வசூத்த பணத்தை திருப்பி தர வேண்டும்
நுகர்பொருள் வானிப கழகத்திற்கு ஆம்ஆத்மி வசீகரன் வலியூறுத்தல்!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரானா பரவுதல் காரணமாக தொடர் ஊரடங்கு 100 நாட்களை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது மக்கள் கடுமையான கஷ்டத்தில் போராடி கொண்டிருக்கிறார்கள் எந்த தொழிலும் முறையாக இயங்கவில்லை ஆட்டோக்கள் ஓடவில்லை டாக்ஸிகள் ஓடவில்லை எந்த கடைகளும் நிறுவனங்களும் ஒழுங்காக இன்னும் இயங்கவில்லை இதன் காரணமாக மக்கள் கடுமையான பஞ்சத்திலும் பசியிலும் பட்டினியிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் பலருக்கு வேலை இல்லை பலருக்கும் பாதி சம்பளம் தான் கிடைக்கிறது எல்லோரும் கஷ்டபட்டு கொண்டு இருக்கின்ற இந்த வேளையில் அரசு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை இலவசமாக தொடர்ந்து வழங்கி வந்தது.

ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் ரூபாய் 5000 வழங்கவேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல கூறி வந்தன ஆனால் இதுவரை 2000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு, சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது இந்த சூழலில் திடீரென்று நேற்று முதல் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பொருட்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறது ஊரடங்கு காலத்தை நீட்டிக்கொண்டே செல்லும் தமிழக அரசு இது போன்று திடீரென்று ஏழைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு வழங்கப்படும் இலவச சலுகை பொருட்களை ஏன் நிறுத்தியது வழங்கப்படும் பொருள்களுக்கு ஏன் பணம் வசூலிக்கப்படுகிறது இது மிகவும் தவறானது மக்களை மேலும் கஷ்டத்தில் ஆழ்த்துவது என்பது அரசுக்கு தெரியாதா?

ரேசன் அட்டைதாரர் அனைவருக்கும் அனைத்து பொருட்களும் இலவசமாக தான் தரப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்த பிறகும் இது யாருடைய உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் இலவச பொருட்களுக்கு பணம் வசூலிக்க சொன்னது யார்?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி மற்றும் அந்த துறையை சார்ந்த அமைச்சர் திரு.காமராஜ் உடனடியாக இதை கவனத்தில் கொண்டு இதை கண்காணித்து மீண்டும் பழைய நிலையிலேயே அவர்கள் அனைவருக்கும் அனைத்து ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.

ஏழை மக்களிடம் ரேஷன் பொருட்களுக்காக கடைகளில் வசூலிக்கப்பட்ட பணத்தை அரசு திருப்பி தரவேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இங்கனம்
வசீகரன்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஆம்ஆத்மிகட்சி
தமிழ்நாடு
03/07/2020

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …