கோவிட் -19 குறித்த அண்மைச் செய்திகள் – India


4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை விட அதிகமாக 1.65
லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும், சமாளிக்கவும், மத்திய அரசு,  மாநில / யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்தும், திட்டமிட்டும் மேற்கொண்டு வரும்  நடவடிக்கைகள் காரணமாக,  கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை, இன்று (5 ஜுலை, 2020) 4,09.082-ஆக அதிகரித்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,856 நோயாளிகள் கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.  

கோவிட்-19 பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையை விட 1,64,268க்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், தேசிய அளவில் கோவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் சதவீதம்  60.77% ஆக உள்ளது.

தற்போது, 2,44,814 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்.

21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், குணமடைவோர் எண்ணிக்கை, தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.  அந்தப் பட்டியல் வருமாறு:

வ.எண்.மாநிலம்/யூனியன் பிரதேசம்குணமடைவோர் வீதம்
1சண்டிகர்85.9%
2லடாக்82.2%
3உத்தராகண்ட்80.9%
4சட்டிஸ்கர்80.6%
5ராஜஸ்தான்80.1%
6மிசோரம்79.3%
7திரிபுரா77.7%
8மத்தியப்பிரதேசம்76.9%
9ஜார்கண்ட்74.3%
10பிகார்74.2%
11ஹரியானா74.1%
12குஜராத்71.9%
13பஞ்சாப்70.5%
14தில்லி70.2%
15மேகாலயா69.4%
16ஒடிசா69.0%
17உத்தரப்பிரதேசம்68.4%
18இமாசலப்பிரதேசம்67.3%
19மேற்கு வங்கம்66.7%
20அஸ்ஸாம்62.4%
21ஜம்மு காஷ்மீர்62.4%

 நாடு முழுவதும் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.  அரசு சார்பில் 786 பரிசோதனைக் கூடங்களும், 314 தனியார் பரிசோதனைக் கூடங்கள் என, நாடு முழுவதும் 1,100-க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.  அதன் விவரம் வருமாறு :

•          உடனுக்குடன் பரிசோதிக்கும் ஆர்.டி. பி.சி.ஆர் அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்:  591 (அரசு: 368 + தனியார்: 223 )

•          உண்மையான இயல்பு அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள் : 417 (அரசு:385+தனியார்:223)

•          சி.பி.நாட் அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 92 (அரசு: 33+தனியார்:59) 

திட்டமிட்ட  சோதனை, தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல்  உத்தியை, கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்வதில் இருந்த தடைகளை அகற்ற அண்மையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுடன் இணைத்தால்,  தினசரி பரிசோதனை செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்;  கடந்த 24 மணி நேரத்தில் 2,48,934 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 97,89,066 ஆகும். 

‘பொது மருத்துவம்  மற்றும்  சிறப்பு மனநலச் சேவை’ தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.  அதன் விவரங்களை அறிந்துகொள்ள:

https://www.mohfw.gov.in/pdf/MentalHealthIssuesCOVID19NIMHANS.pdf

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …