MCA முதுகலை பட்டப்படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே..


ரும் கல்வியாண்டு முதல் 3ஆண்டுகளாக இருந்த MCA முதுகலை பட்டப்படிப்பு 2ஆண்டு படிப்பாக மாற்றப்படுகிறது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது..

இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனைத்து மாநில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது
கணினி அறிவியல் சார்ந்த முதுகலை MCA பட்டப்படிப்பு மூன்று ஆண்டு படிப்பாக இருந்து வருகின்றது..

மாணவர்களிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையினை ஏற்று தற்போது 3ஆண்டுகளாக உள்ள MCA பட்டப்படிப்பு 2ஆண்டு பட்டப்படிப்பாக மாற்றப்படுகின்றது..இதற்கான அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது.மேலும் MCA படிப்பிற்கான கல்வித்தகுதியும் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி இளநிலையில் B,sc B.CA, கணினி அறிவியல் B.sc கணிதம்,
கணிதத்துடன் கூடிய B.Com,B.Aஆகியவை படித்திருத்தல் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …