இயக்குனர்-நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும் “நன்னயம்”


பிரபல இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான மனோபாலாவின் நிறுவனமான பிக்சர் ஹவுஸ், இணைய சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் ட்ரெண்ட் லவுட் நிறுவனத்துடன் இணைந்து நன்னயம் எனும் ஒரு சிறந்த குறும்படத்தை தயாரித்து உள்ளது.

நன்னயம் எனும் இக்குறும்படம், விஷன் டைம் யூ ட்யூப் சேனலில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

குறும் படத்தின் டீசரை ஜூலை 6 அன்று படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பிரபல திரைப்பட நடிகர்களான உதயா மற்றும் அம்மு இக்குறும்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இவர்களைத் தவிர, இக்குறும்படத்தில் ஜெயபிரகாஷ், சத்யப்ரியா, மற்றும் காமேஸ்வரன் போன்ற பல திரைப்பட கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெஞ்சைத் தொடும் இக்கதை ஒரு பெண்ணைப் பற்றியது. சாதி சம்பிரதாயங்களில் அதி தீவிர நம்பிக்கை உடைய ஒரு தந்தைக்கும், சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்க போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது.

குறும்படத்தைப் பற்றி மேலும் குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இது உலகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பொழுது நடக்கும் கதையாக திகழ்கிறது. அதாவது, இந்த கதை, இன்றைய காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதை.

மனதை வருட கூடிய இந்த நல்ல கதை, அதன் பார்வையாளர்களின் மனதில் பல முக்கிய கேள்விகளை எழுப்பும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ட்ரெண்ட் லவுட் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சிதம்பரம் இக்குறும்படத்தை பற்றி கூறுகையில்,”பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய மனோபாலா இக்குறும்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். திறமையான இயக்குனரும் நடிகருமான திரு. மனோபாலா உடன் இணைந்து இக்குறும்படத்தை தயாரிப்பதில் நாங்கள் பெருமிதமும், பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறோம். இக்குறும்படம் எல்லா தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம். இன்னும் பல அர்த்தமுள்ள நல்ல படங்களை வருங்காலத்திலும் தயாரிப்போம் என்று நம்புகிறேன்.”

குறும்படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் பாடகர் அஜீஷ் இசையமைக்க, கோபிகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை உமாபதி திறம்படசெய்திருக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் நன்னயம் குறும்படம் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …