சென்னையில் பிப்ரவரி 19 ஆம் தேதி துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


சென்னையில் வரும் பிப்ரவரி 19, 2020 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு. V.விஷ்ணு , இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19.02.2020 ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை கீழ்காணும் முகவரியில் துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல்தளம், டான்சி கார்ப்பரேட் வளாகம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி,

சென்னை – 600 032 இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10 க்கும் மேற்பட்ட துணை மருத்துவம் சார்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

துணை மருத்துவ படிப்புகள் (B.Sc.Nursing, Dip Pharm, B.Pharm, M.Pharm, Pharm D etc) அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் (B.Sc. Science Subjects and DMLT ) படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

வேலைநாடுநர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (RESUME) கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியமில்லை. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (044 – 22500134) வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *