நடப்புக் குறுவைப் பருவத்தில் நாடு முழுவதும் உரங்களுக்குப் பற்றாக்குறை இல்லை: திரு. கவுடா.


மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு. டி.வி.சதானந்த கவுடா நடந்து வரும்குறுவை சாகுபடிப் பருவத்தில் நாடு முழுவதும் உரங்களுக்குப் பற்றாக்குறை இல்லை என்று கூறியுள்ளார்மேலும், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து போதுமான அளவு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

இன்று புதுடில்லியில் திரு. கவுடாவைச் சந்தித்த மத்தியப்பிரதேச முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுகானின் கோரிக்கையின் படி அவரதுமாநிலத்தில் யூரியா போதுமான அளவு கிடைக்கும் / கிடைக்க ஏற்பாடுசெய்யப்படும்என்று திரு. கவுடா உறுதியளித்தார். மாநிலத்தில் இதுவரை யூரியா பற்றாக்குறை ஏற்படவில்லை என்றாலும்இந்தப் பருவமழையின் போது அதிக மழை பெய்ததால் யூரியாவின் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும்கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது விதைப்பு 47 சதவீதம்அதிகரித்துள்ளது என்றும் திரு. சவுகான் கூறினார்.

இந்தக் குறுவைப் பருவத்தில் விவசாயிகளால் எதிர்பார்க்கப்படும் யூரியாவின் தேவை அதிகமாக இருப்பதால்ஜூலைஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்எப்போதும் வழங்கப்படும் யூரியாவை விடகூடுதல் யூரியா வழங்க ஏற்பாடு செய்யுமாறுமத்திய அரசிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

அப்போது வரும் நாட்களில் மத்தியப்பிரதேசத்திற்கு போதுமான அளவு யூரியா வழங்கப்படும் என்று திரு. கவுடா உறுதியளித்தார்.ஜூன் வரைமாநிலத்திற்கு கிட்டத்தட்ட 55000மெட்ரிக் டன் யூரியா கிடைத்துள்ளதுமேலும் ஜூலை வழங்கல் திட்டத்திற்கு கூடுதலாக ஜூலை 3, 2020அன்று 19000 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உரங்கள் துறை தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், நடந்து வரும் குறுவைப் பருவத்தில் விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு யூரியாவை வழங்க உறுதிபூண்டுள்ளதுஎன்றார், மேலும், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசுவிவசாயிகளுக்கு மலிவு விலையில் தேவையான அளவு உரங்களைசரியான நேரத்திற்குள் வழங்குவதை உறுதி செய்வது குறித்து மிகவும் திட்டவட்டமாக உள்ளதுஎன்றார்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …