கரோனா தடுப்பு பணிகளுக்கு தீ அணைப்புத்துறைக்கு 50 புதிய வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கிருமிநாசினி தெளித்திட 50 துரித செயல் வாகனங்களின் (Quick Response Vehicle)) சேவைகளை துவக்கி வைக்கும் அடையாளமாக
7 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துரித செயல் வாகனங்களின் (Bolero Camper) சேவைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இவ்வாகனங்களில் கிருமி நாசினி தெளித்திட தண்ணீரை பனித் திவலையாக மாற்றி பீய்ச்சியடிக்கும் தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் மற்றும் பேரிடர்கால மீட்பு பணிக்காக 8 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ரப்பர் இயந்திர படகுகள் பொருத்தப்பட உள்ளன. கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் முடிவுற்ற பிறகு, இவ்வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டடங்களில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்காக தமிழகமெங்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக வான்நோக்கி உயரும் ஏணி ஊர்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கொரோனா தடுப்புப் பணிக்காக சென்னை மாநகரில் உள்ள குறுகிய சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் வகையில், காற்றழுத்த கிருமி நாசினி தெளிப்பான் பொருத்தப்பட்ட 25 இருசக்கர வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் 3.6.2020 அன்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, இ.கா.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் சி. சைலேந்திர பாபு, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …