இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல்


இந்தியாவில் உள்ள 194 கலங்கரை விளக்கங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்காக மத்திய கப்பல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.மன்சுக் மண்டாவியா இன்று உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார். கலங்கரை விளக்கங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இது கலங்கரை விளக்கங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும் என்றும் திரு.மண்டாவியா தெரிவித்தார்.

நூறாண்டுகளுக்கும் பழமையான கலங்கரை விளக்கங்களை கண்டறியுமாறு அவர் அதிகாரிகளை அறிவுறுத்தினார். கலங்கரை விளக்கங்களின் வரலாறு, அவை இயங்கும் முறை, அங்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதற்காக அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். குஜராத்தில் உள்ள கோப்நாத், துவாரகா, வீரவல் ஆகிய கலங்கரை விளக்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சுற்றுலாப் பணிகளை மேம்படுத்துவது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

SHRI MANSUKH MANDAVIYA CALLS FOR DEVELOPING LIGHTHOUSE TOURISM OPPORTUNITIES IN INDIA

Union Minister of State(I/C)for Shipping Shri Mansukh Mandaviya today held a high level meeting, for developing around 194 existing lighthouses across India as Major tourist attractions. Shri Mandaviya said it will boost the tourism activities in lighthouses surrounding areas and give an opportunity to know about the enriched history of lighthouses.

The officials presented a detailed action plan to develop lighthouses as tourism spots. Shri Mandaviya advised officials to identify the lighthouses which are more than 100 years old. He put impetus on creating museums to showcase the history and working of lighthouses, equipment used in lighthouse operation etc.

As per the master development plan of lighthouses, some key attractions are museums, aquarium, children playarea and gardens, along with water bodies.

The Minister also took stock of the progress for developing tourist activities at Gopnath, Dwarka and Veraval lighthouses of Gujarat.

The Minister instructed the official to prepare a detailed presentation on the project at the earliest. The meeting was attended by the Secretary, Shipping Ministry and DG, Directorate General of Lighthouses and Lightships along with the other stakeholders.