சென்னை மாநகராட்சியில் கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக கரோனாவைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவிகிதமாக ( 18.2 % ) குறைந்துள்ளது- நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு , பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது .

இக்கூட்டத்தில் , மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி உத்தரவின்படி கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . மேலும், அமைச்சர்கள் தலைமையிலும் பல்வேறு உயர் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அளவு குறைந்துள்ளது . இதில் குறிப்பாக சென்னை சமூக களப்பணி திட்டத்தின் ( Chennai Communty Intervention Plan ) மூலம் வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல் , இருமல் மற்றும் சளி போன்றவை இருந்தால் அவர்களை உடனடியாக கண்டறிந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

மேலும் 12,000 பணியாளர்களைக் கொண்டு சென்னையில் உள்ள சுமார் 12 லட்சம் வீடுகளுக்கு நாள்தோறும் சென்று பொது மக்களுக்கு ஏதேனும் காய்ச்சல் , சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று 98 மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டள்ளனர் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் உத்தரவின்படி வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பி இருந்த நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்த நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப் படுத்துவதற்காக 50,000 படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உணவு உட்பட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .

இதுநாள் வரை சுமார் 10,000 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேற்குறிப்பிட்ட சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஜூன் மாதத்தில் நோய்த் தொற்று விகிதம் சராசரியாக 242 சதவிகிதத்தில் ( 242 % ) இருந்து தற்பொழுது ஜூலை மாதத்தில் சராசரியாக 18.2 சதவிகிதமாக ( 182 % ) நோய்த் தொற்று குறைந்து உள்ளது என்பதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் . இதில் குறிப்பாக 07.07 . 2020 நேற்று ஒரு நாளில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10,139 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 1203 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது .

இது 1187 சதவிகிதமாகும் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்பின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட வருகிறது . எனவே துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்குகின்ற ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றி வைரஸ் தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் . தொடர்ந்து , பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் , மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் , 197 பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள் , குளங்கள் பராமரிப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட உத்தரவிட்டார்.

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டம் , அம்ரூத் திட்டத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டிய பணிகள் , 2020-21ம் ஆண்டிற்கான TURIP திட்டம் , 2020-21ம் ஆண்டிற்கான IUDM திட்டம் , Smart City- ல் விடுபட்ட திட்டப்பணிகள் குறித்தும் , பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் 2018-19 மற்றும் 2019-20ம் ஆண்டிற்கான குடிநீர் , சாலை , தெருவிளக்குகள் , அனைவருக்கும் வீடுகள் போன்ற திட்டப்பணிகள் , 2020 2 ம் ஆண்டிற்கான TURIP – IUDM – Nabard பணிகள் மற்றும் CGF / O & M திட்டப் பணிகள் , 14 வது CFC 2019-20ம் ஆண்டிற்கான 2 ம் தவணைத் தொகை விடுவிப்பு , 14 வது CFC2019-20 ம் ஆண்டிற்கான 2 ம் தவணைத் தொகை விடுவிப்பு குறித்தும் கேட்டறிந்து இத்திட்டப்பணிகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள் . ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , பசுமை வீடு திட்டம் , ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் , தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் , நபார்டு திட்டம் குறித்தும் கேட்டறிந்து , நபார்டு திட்டத்திற்கான பணிகளை துவங்கி விரைந்து முடித்திடவும் , 2019-20ம் ஆண்டு SCPAR Additional பணிகள் துவங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை , 2019-20ம் ஆண்டிற்கான SFC திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள் மற்றும் குட்டைகள் பராமரிப்பு பணிகள் குறித்தும் , MGNREGS 2020-21ம் ஆண்டிற்கான ஆடு மற்றும் மாட்டுக் கொட்டகைகள் பணிகளை விரைந்து துவங்கி முடித்திட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடைப்புகள் உள்ள குழாய்களை புதுப்பிக்கும் நடவடிக்கை , 150 MLD மற்றும் 400 MLD திட்டம் , TTRO கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் , ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கண்டலேறு அணையில் இருந்து 8 TMC குடிநீர் பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் , தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் , 2020-21ம் ஆண்டிற்கான புதிய திட்டங்களின் நிலை , பெரிய கூட்டு குடிநீர் திட்டங்களின் நிலை , சிவகங்கை மாவட்டத்தின் 8 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 2452 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப் பணியின் நிலை குறித்து கேட்டறிந்து , கூட்டு குடிநீர் திட்டங்களில் கடைக்கோடி கிராம மக்களுக்கும் போதுமான அளவில் குடிநீர் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார் . தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2020-21ம் ஆண்டிற்கான வங்கி கடன் இணைப்பு , சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்தபட்சம் ரூ .10 இலட்சம் சிறப்பு கடனுதவி மற்றும் கொரோனாவிற்காக வங்கிகள் மூலம் சிறப்பு கடனுதவி வழங்குவது , புத்தாக்கப் பயிற்சி மற்றும் புத்தகப் பராமரிப்பு குறித்தும் , சமுதாய முதலீட்டு நிதி மற்றும் சுழல் நிதி வழங்குவது குறித்தும் , முதியோர் சுயஉதவிக் குழுக்களின் செயல்திட்டம் , இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்கிட வங்கிகளில் கடனுதவி பெற மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஒருங்கிணைப்பு பணிகள் , நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் 1 இலட்சம் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு உபகரணங்கள் வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்து பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார் .

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டு திட்ட இலக்கை அடைய எடுக்கப்பட்ட நடவடிக்கை , 2019-20 முடிய உள்ள நிலுவை இலக்கு முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் , தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் TNRTP திட்டம் குறித்தும் , அத்திட்டத்தை வாழ்வாதார திட்டமாக செயல்படுத்திட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார் . மேலும் , ஒப்பந்தப்புள்ளி கோரப்படாத அனைத்து பணிகளுக்கும் விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரவும் . ஆரம்பிக்கப்படாத பணிகளை ஆரம்பித்து விரைவில் முடித்திடவும் . மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டிய பணிகளில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்கவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் . மேலும் நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்த வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்யவேண்டும் எனவும் , குளம் , ஏரி போன்ற நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை துரிதபடுத்த வேண்டும் எனவும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.ஹன்ஸ்ராஜ் வர்மா இ.ஆ.ப. , அவர்கள் , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் , இஆப . , அவர்கள் , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ் , இ.ஆ.ப. , அவர்கள் , நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன் இ.ஆ.ப. , அவர்கள் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் முனைவர் சி.என்.மகேஸ்வரன் , இ.ஆ.ப. , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி இ.ஆ.ப. , அவர்கள் , பேரூராட்சிகளின் இயக்குநர் திரு.எஸ்.பழனிச்சாமி , இ.ஆப. , அவர்கள் , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ( பொ ) முனைவர் ஜெ.யு.சந்திரகலா , இ.ஆ.ப .. அவர்கள் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …