ஈசிஎச்எஸ் திட்டத்தின் கீழ், குடும்பத்திற்கு ஒன்று வீதம், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்கும் செலவை திருப்பித் தர அனுமதி


கொவிட்-19 நோயாளிகளின் உடல்நலனை கண்காணிப்பதற்கு உதவும் மிக முக்கிய கருவியான பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்கியதற்கான தொகையை, முன்னாள் ராணுவத்தினர் பங்களிக்கும் சுகாதாரத் திட்டத்தின் (ஈசிஎச்எஸ்) பயனாளிகளுக்கு, குடும்பத்திற்கு ஒன்று வீதம் திருப்பித் தர பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 தொற்று உறுதிபடுத்தப்பட்ட ஈசிஎச்எஸ் பயனாளிகள், குடும்பத்திற்கு ஒன்று வீதம் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவியை வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ஒன்றுக்கு அதிகமானவர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்ஸி மீட்டருக்கான தொகை மட்டுமே திருப்பித் தரப்படும். பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வாங்குவதற்கான உண்மையான கட்டணத்தை (அதிகபட்சம் ரூ.1200) ஈசிஎச்எஸ் பயனாளிகள் கோரிப் பெறலாம்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …