மத்திய உள்துறை அமைச்சர், திரு அமித்ஷா, குருகிராமில் உள்ள மத்திய ஆயுதப்படை காவலர் முகாமில், மத்திய ஆயுத போலீஸ் படைகளின் நாடு தழுவிய மரம் வளர்ப்பில் பங்கேற்கிறார்


மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, நாடு முழுவதும் உள்ள மத்திய ஆயுத போலீஸ் படைகளின் (CAPFs) பணியாளர்கள் நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் பாதுகாப்பை வழங்குவதோடு, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது மட்டுமல்லாமல், COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக நமது நாடு நடத்தி வரும் போரில் பெரும் பங்களிப்பு செய்வதாகத் தெரிவித்தார். ஹரியானாவின் குருகிராமில் இன்று நாடு தழுவிய அளவில் மரம் வளர்ப்பைத் தொடங்கிய திரு ஷா, மத்திய ஆயுத போலீஸ் படைகள் 31க்கும் மேற்பட்ட ஜவான்களை தொற்றுநோயால் இழந்துள்ளதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு மரியாதை செலுத்திவதாகவும் கூறினார். தொற்றுநோயை உலகம் எதிர்கொள்ளும் இந்த நேரத்திலும், மரம் வளர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.


கோவிட் -19 க்கு எதிரான போர் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது என்று திரு. அமித்ஷா கூறினார். இன்று தொற்று நோயை நிர்வகிப்பதில் இந்தியா ஒரு வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மிகவும் வளர்ந்த நாடுகளின் சுகாதாரச் சேவைகள் கூட கொரானா தாக்கத்தால் சரிந்து கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், இந்தியா எப்படி இருக்கும் – “கூட்டாட்சிக் கட்டமைப்பைக் கொண்ட, அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட, இவ்வளவு பெரிய நாடு இந்தத் தொற்று நோயை எதிர்த்துப் எப்படி போராடும்?”  என்று முழு உலகமும் கவலை கொண்டிருந்தது. ஆனால் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் இன்று இந்தத் தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் மிக வெற்றிகரமாக இந்தியாவில் நடந்து வருகிறது. ‘ஒரு மக்கள், ஒரே சிந்தனை, ஒரே தேசம்’ என்ற தாரக மந்திரத்துடன் பிரதமர் தலைமையில் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் நாம் வலுவான பீடத்தில் உள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

உலகெங்கிலும் அரசாங்கங்கள் மட்டுமே இந்த தொற்று நோயை எதிர்த்துப் போராடுகின்றன என்று உள்துறை அமைச்சர் கூறினார், ஆனால் இங்கே இந்தியாவில், இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதில் மாநில அரசுகளைத் தவிர 130 கோடி மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். நாடு முழுவதும் எங்கும் பீதி நிலவவில்லை, உண்மையில் இந்த சவாலை எதிர்கொள்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம், இந்தத் தொற்று நோயை சமாளிப்பதிலும் உறுதியாக இருக்கிறோம். இந்தச் சண்டையில், நமது மத்திய ஆயுத போலீஸ் படையினர் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றனர் – அது சந்தைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நெரிசலான இடங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகள் ஆதரவை நாடிய போதும், அல்லது உள்ளூர் காவல்துறை ஊரடங்கை செயல்படுத்துவதில் நமது பாதுகாப்பு படையினரின் ஆதரவை நாடிய போதும், நமது பாதுகாப்புப் படையின் ஜவான்கள் தேவை இருப்பதாக கண்டறியப்படவில்லை. மேலும், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், கோவிட்–19 நோய்த் தொற்றுக்காக கடமையில் ஈடுபடும் போது எச்சரிக்கையாக இருப்பதுடன், தங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல், தேசத்திற்கும், உலகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக தங்களை முன் நிறுத்திய CAPF இன் கொரோனாவை எதிர்த்து போராடும் வீர்ர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் வணக்கம் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மத்திய ஆயுத போலீஸ் படைகள் மரம் வளர்ப்பில் 1.37 கோடி மரக்கன்றுகளை இலக்காகக் கொண்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஒரு மரம் பத்து மகன்களுக்கு மேல் மதிப்புள்ளது என்று ஒரு பண்டைய இந்து உரையிலிருந்து மேற்கோள் காட்டி திரு அமித்ஷா கூறினார்.

ஒரு குளம் 10 கிணறுகளுக்கு சமம்பத்து குளங்கள் ஒரு ஏரிக்கு சமம் .

ஒரு மகன் பத்து ஏரிகளுக்கு சமம்.  ஆனால் ஒரு மரத்தின் மதிப்பு பத்து மகன்களுக்கு சமம்.

***********