கல்மரம் (திலகவதி)


இலவசமாக |  இ – புத்தகம்

https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1208

“காசு வச்சிங்கிறயாம்மா?” என்று தூக்கம் கலையாத குரலில் கேட்டபடியே பாயில் புரண்டு படுத்தான் காசி. சுள்ளென்று அடித்த வெயில் அவன் முகத்தில் உறைத்தது. சற்று முன் வீடு வந்து சேர்ந்த ஆதிலட்சுமி, அவள் வேலை செய்கிற வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த பழைய சோறு குழம்பு, காய் கறிகளையெல்லாம் வீட்டுப் பாத்திரங்களுக்கு மாற்றிக்கொண்டிருந்தாள்.

“யமோவ்” என்று குரல் கொடுத்தபடி வீட்டுக்குள் வந்தாள் காவேரி. சிறிய எவர்சில்வர் தூக்கில் இருந்த டீயைக் கிளாசில் ஊற்றிக்கொண்டிருந்த ஆதிலட்சுமி, மகளின் குரல் கேட்டு குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள். “ஒம் மவனுக்கு காசு வேணுமாம். சம்பாரிச்சுக் கொண்டாந்து கொட்டி வச்சிங்கறாரே அந்த மூலயிலே, அதிலேர்ந்து ஒரு படி அள்ளிக் குடு” காலி டம்ளரையும், டீத்தூக்கையும் எடுத்துக் கொண்டு குனிந்து வீட்டுக்குள் வந்தாள் ஆதிலட்சுமி. படுத்திருந்த மகன் அருகே உட்கார்ந்தாள்.

இலவசமாக |  இ – புத்தகம்

https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1208

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …