நாங்கள் நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடுசெயல்படுகின்றோம் – NEWS 18 அறிக்கை


சமீப நாட்களாக தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் மூலம் ஒரு தரப்பினர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மீது ஒரு மோசமான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், அவர்கள் ஆதாயம் பெறும் வகையில் தங்களுக்கு ஆதரவாக தொலைக்காட்சி இயங்குகிறது என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கின்றனர் .

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் எமது தொலைக்காட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இடம்பெறும் கருத்துக்கள் (ட்ரெண்டுகள்), தொலைக்காட்சி விருப்பு வெறுப்பின்றி நடுநிலையாக வெளிப்படைத்தன்மையோடுசெயல்படுகின்றது என்பதற்கான சான்று.

அனைவரது தரப்பு விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு, எங்களது அடிப்படை மதிப்பீடுகளை வலுப்படுத்த தயாராக இருக்கிறோம். எங்களது தவறுகளை திருத்திக்கொள்ளவும் நாங்கள் தயக்கம் காட்ட மாட்டோம், தொழில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தலைமையில் இயங்கும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி எந்தவொரு பக்கச் சார்புமின்றி அரசியல் அவதூறு எல்லைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது.

இடது, வலது அல்லது மைய கருத்துக்கள் என அனைத்துத் தரப்பினரது பார்வையையும் பாகுபாடின்றி வெளியிடுவது, செய்தியாக்கம் செய்வது என்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் .

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …