கோவிட்-19 தற்போதைய தகவல்கள்


குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்தியாவில் குணமடைவோர் விகிதம், ஏறத்தாழ 75 சதவீதமாக அதிகரித்துள்ளது

சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை, ஏறத்தாழ 16 லட்சமாக அதிகரித்துள்ளது

நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மரணம் அடைபவர்களின் விகிதம் உலக அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது இது மேலும் குறைந்துள்ளது

கோவிட் நோயிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் இந்த நோயிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 75 சதவீதம் அதிகரித்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் 57 ஆயிரத்து 989 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் இதையடுத்து இன்று வரை குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை,22 லட்சத்து 80 ஆயிரத்து 566.

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001BU7X.jpg

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில்(7 லட்சத்து 7 ஆயிரத்து 668) குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஏறத்தாழ 16 லட்சமாக உள்ளது (1572898)

http://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image00212QO.jpg

இந்த வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல நாள்தோறும் குணமடைந்து வருபவர்களில் சராசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது 15018 (17 ஜூலை 2020) 13-19 ஆகஸ்ட் 2020 வாரத்தில் எண்ணிக்கை 60557.

குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 23.24 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதனால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மரணம் அடையும் விகிதம், தற்போது 1.86 சதவீதமாக உள்ளது இது உலக அளவில் மிகக் குறைவானதாகும் முழு வீச்சுடன் பரிசோதனை மேற்கொள்வது, நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை முழுமையாகக் கண்டறிவது, பலனுள்ள முறையில் சிகிச்சை அளிப்பது என்ற மத்திய அரசின் கொள்கைப் படி தொடர்ந்து விரிவான முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் இது சாத்தியமாகியுள்ளது

கோவிட் நோயாளிகள் அதிக அளவில் குணமடைந்து வருவதும், மரணமடைவோர் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதும் இந்தியாவின் படிப்படியான, தாமாகவே முன்வந்து செயல்படுகின்ற உத்திகள், கள அளவில் நல்ல பலனைத் தந்து வருகின்றன என்பதைக் காட்டுகிறது.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …