குழந்தைகள் முக கவசம் கட்டாயம் – WHO


12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இதனை அடுத்து 12 வயது மற்றும் அதற்கு அதிகமான வயது குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது.

குறிப்பாக மற்றவர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்துக்காவது இடைவெளி உத்தரவாதம் தர முடியாதபோது, கண்டிப்பாக கொரோனா பரவும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …