கரோனா, இ-பாஸ், இரண்டாவது தலைநகரம் குறித்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதில்கள்…


மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அதனை அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்

சென்னை பட்டாளத்தில் உள்ள கரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 381 ஆவது வயதை கடந்த சென்னை மாநகரத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அவர், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதாவும் தமிழகத்தில் சராசரியாக 252.2 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது.

இது சராசரியான அளவைவிட 28 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருக்கிறது என்றார். கடந்த ஆண்டு தமிழக அணையில் நீர் கொள்ளளவு பவானிசாகர், மணிமுத்தாறு, பெருஞ்சாணி, பெரியாறு, அமராவதி மற்றும் திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டைவிட நீரின் கொள்ளளவு அதிகமாக கிடைத்திருக்கிறது. ஆனால் மேட்டூர், பாவநாசம், கிருஷ்ணகிரி, சோலையார் அணையில் நீரின் கொள்ளளவு கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில் நீரின் இருப்பு கொள்ளளவு கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது நமக்கு ஆறுதல் அளிக்கிறது என தெரிவித்தார்.

உலகத்தில் தற்போது நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பாதிப்பு தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றார். ஊரடங்கு காலத்தில் திருமண மண்டபங்கள் மூடியிருந்தாலும் திருமணங்கள் நடைபெற்று தான் வருகிறது என கூறினார்.

கொரோனா தொற்று நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக இருக்கிறது ஒரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்று அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
இ – பாஸ் முறை ரத்து செய்வது குறித்த கேள்விக்கு, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம், முதலமைச்சர் இது குறித்து களஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் விரைவில் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

இரண்டாவது தலைநகரம் குறித்த கேள்விக்கு, எல்லா மாவட்டங்களில் உடைய மாவட்டங்களின் வளர்ச்சியை முக்கியம் அதனடிப்படையில் அமைச்சர்கள் அவரவர் மாவட்டத்தை குறிப்பிட்ட உரிமை இருக்கிறது மக்களின் வணக்கம் வளர்ச்சிக்காகவும் வைக்கும் எந்த கோரிக்கையையும் தவறு இல்லை, உரிய நேரத்தில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

பட்டியலின ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்த கேள்விக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளார் விரைவில் இதுகுறித்து விசரனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …