கடற்கரை நகரம் – Part 3

கடற்கரை வீடு

உண்மையை சொல்லனும்னா, நான் அப்பாவை பார்த்து ஆறு மாசத்துக்கு மேல இருக்கும், ஆனால் வாரத்துக்கு ஒரு முறை போனில் பேசிக் கொள்வோம், கடைசியாக டிசம்பர் 2-ம் தேதி தான் போன்ல பேசினேன், என்று கூறும்போது, அவள் அன்று என்ன நடந்தது என எண்ணத் தொடங்கினாள்.

ஏய் சுபா உங்க அப்பா கால் பண்ண சொன்னாரு என்றாள் மதி, ஒரு முக்கிய வேலையா இருந்தேன், கால் எடுக்க முடியல உடனே உனக்கு கால் பண்ணிட்டாரா? அவருக்கு வேற வேலையே இல்ல, சாரி மதி. என்ன சுபா இப்படி சொல்ற, நம்ம மேல, அக்கறை எடுத்து பேசுறதுக்கு அவர் ஒருத்தர்தான் இருக்காரு. பாவம் அவரும் தனியா தான இருக்காரு. உடனே ஃபோன் பண்ணி பேசு, என்று அதட்டினாள் மதி!..

இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கும்போதே வீடியோ கால் ஒன்று வந்தது!…

இதோ அப்பதான் பேசுறாரு எடுத்து பேசு டி என்றாள் மதி.

அப்பா, எப்படி இருக்கீங்க என்றாள் சுபா, எனக்கு என்ன நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க, ஆமாம் இது என்ன டிரஸ்?, இறுக்கமான டி-ஷர்ட்டை அணிந்து இருந்தாள் அப்பொழுது.

ஐயோ விடுங்கப்பா, இதெல்லாம் இங்கு ஒன்னும் இல்ல, நீங்க சாப்டீங்களா, நான் தான் போன் பண்ணுவேன்ல, அதுக்குள்ள ஏன் மதிக்கு கால் பண்ணிங்க?
இல்லம்மா, ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான்.

சரி சொல்லுங்க, வேலை இருக்கு!.. உனக்கு எப்ப தான் வேலை இல்ல, எனக்கு இங்கு தனியா இருந்து இந்த வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி, மணக்கோலத்தில் பாக்கணும் அதுதான் என்னோட ஆசை.

அப்பா வேற வேலையே இல்லையா, எதுக்கு கல்யாணம்?…

சுபலட்சுமி, உனக்கு இப்பவே 26 வயசு ஆயிடுச்சு, இனியும் எப்படி தள்ளிப்போட முடியும் நீயே சொல்லு? தயவு செஞ்சு வேலையை விட்டுட்டு உடனே வா, உனக்கு புடிச்ச மாதிரி நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ!..
உனக்காக ஒரு புது வீடு வாங்கி இருக்கேன் என்று சொன்னார்.

அப்பா எனக்கு வேலை இருக்கு, தயவு செஞ்சு கல்யாணத்த பத்தி பேசுனா எனக்கு கால் பண்ணவே பண்ணாதீங்க, என்று போனை கட் செய்தாள்.

நான் அப்படி பேசி கட் பண்ணி இருக்கக்கூடாது, என்று சத்தமாக கூறினாள்.

சரி அத விடுங்க,… நீங்க சொல்லுங்க மதன்.

அப்பா, போன்ல கடைசியா என்ன சொன்னாரு? மிஸ்.சுபா!…

நான் கடைசியா போன் பேசும்போது, ஏதோ வீடு வாங்கி இருக்குறதா சொன்னார்.

என்ன வீடா? எங்க என்று கேட்டான்? மதன்!..

ஏதோ SEA VIEW நல்லா இருக்கும்னு சொன்னார், மத்தபடி நான் எதுவும் கேட்கல,..

என்ன கடற்கரை பக்கத்திலா?

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *