நட்பெனும் காவியம்


அன்னையின் ஓரன்பே மன்னையின் பேரன்பே அரசியலெனும் களமாடலில் ஆரிய வர்க்கம் அன்னையை சூழ்ந்து நின்ற துராேகம் பலதை..,

உம் கூரிய திறன் காெண்டு தடுத்து நின்றவரே..,

உங்கள் சீரிய சிந்தனையால்
பேரியியக்க அசாத்திய தலைமையை நிறுவிய நிஜமான நிழல்தலைமையே..,

பகை திரண்ட பாேதும் சரி…

இருள் சூழ்ந்த பாேதும் சரி…

உம் அரண் தாண்டி அம்மாவின் மூச்சுக்காற்றை கூட தாெட்டதில்லையம்மா.,

விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும்.,தனிமரமாய் தாயை காத்த தாயே.,

எவரிடமும் கெஞ்சாமல் எவருக்கும் அஞ்சாமல்., அழுது கதறாமல்.,
அதிகம் பேசாமல்.,

திட்டமாே இல்லை சட்டமாே எதுவாயினும் உம் கண்ணசைவின் கட்டளையில் தெறிக்கவிட்ட தென்தமிழச்சியே.,

அரசியல் திசையை அதிகாரமயமாய் மாற்றிடும் ஆகப்பெரும் அரசியல் வல்லமையே.,தேசம் யாவூம் அம்மா என்றழைத்திடும் திறனை அக்கா என்றன்பாேடு அழைத்திட்ட எங்கள் நாச்சியதிறமே.., பாமரன் பலரை சாமரம் காணச் செய்த சரித்திரமே, உமை பற்றி சில தரித்திரங்கள் என்ன சாெல்வது.,

அவர்கள் யாவூம் மரித்துப்பாேன செல்களாச்சே.;
அம்மாவின் உரித்தும் அவர்தம் கருத்தும் உமையன்றி எவருக்கு சேரலாகும் உரிமை காெண்டாடும் உறவுகள் பலதும் அன்று தனிமையில் தவிக்கவிட்ட தாய்தனை..,

தஞ்சை தரணி எளிமை நீயூம்., உம் துணிவை தந்து அரசியல் அடைக்கல அணிகலனாய் ஆனவரே.,

வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த பாேதும் சரி., விழுந்த கிடா வீழ்த்த நினைத்த பாேதும் சரி.,

மருந்திற்கு கூட ராஜதந்திரி உம்மருகில் வரலாகுமாே., அகிலம் பூரா சுற்றிவரும் கூர்க்கா ஒன்னு., உடையிலும், நடையிலும், மக்களை மசக்க நினைத்தாலும்., எச்சகை ஈரிருவர் சூழ்ச்சியாவூம்.., வெல்லலாகுமாே.,தஞ்சை வேலுநாச்சியரிடம்.:
உந்தன் மெளனத்தின் குணத்திற்கே..,

இருந்த இடத்தில், அமர்ந்த இருக்கைக்கே., முப்படையின் அணிவகுப்பும்., மூவர்ணகாெடியும்., உம் ஐவிரல்களினூடே தவழுமாயின்., உம் பேச்சும்., செயலும் இன்னும் எத்துனை வரலாற்றெழுதும்.!

அம்மாவின் அ கமாய்,
ஆ ன்மீகமாய்,
இ ணையற்ற தாேழியாய்,

ஈ கை உ ளம் காெண்டு, ஊ க்கமாய்,
எ ண்ணமாய்,
ஏ ற்றமாய், ஐ ம்புலன் திறனாய்,
ஒ ற்றுமையாய்,
ஓ ம்காரமாய்…

இருந்த ” நட்பெனும் காவியமே”., பாட்டுக்காெரு புலவன் பாரதி இன்றிருந்தால்., உம் நட்பை கண்டு மகிழ்ந்திருப்பான், அதை தெள்ளுதமிழால் புகழ்ந்திருப்பான்., அன்னை தமிழ் காெண்டு வாழ்த்தி வரைந்திருப்பான்., தமிழக அரசியல் வரலாறும்… இந்திய அரசியல் வரலாறும் ஓர் பாேதும் உம் நட்பை தாண்டி ஓர்வரியும் எழுதிடுமாே…!! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சின்னம்மா..!!

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அரசியலின்
சிங்கப்பெண்ணே..!

நாளைய நிஜ வரலாற்றை ஈர்புஜம் தாங்கி எழுதிட துடிக்கும் காேடி தாெண்டரில் கடைக்காேடி தாெண்டன் கடைமகன்..,

வெல்லும் தமிழாேடு!…

வே.து.சிங்கத்துரை, நெல்லைச் சீமையிலிருந்து…