முடக்கும் கொரோனா!… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை!…


பல மாதங்களாக கொரோனாவினால் ஏற்பட்ட முடக்கம் பலருடைய வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் வாழ்க்கையை தள்ள முடியாத அளவிற்கு, கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை கடமையை செய்வது மட்டுமல்லாமல், இயலாத பல மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு காவல் துறை சார்பாக செய்யப்பட்ட உருக்கமான உதவி குறித்த செய்தி தான் இது!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே 110 வயது ஆன மூதாட்டி கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்த அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாதமாதம் அவரது குடும்பத்திற்கு தேவையான அரிசி¸ பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உடை ஆகியவற்றை வழங்கி உதவி வருகின்றனர்.

இது போன்ற செயல்கள், காவல்துறையின் மேல் உள்ள நன்மதிப்பை மக்களிடம் பெருக செய்கின்றது!..

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …