பிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்!… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து!…


ஜாகீர் கான் என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 2000 முதல் 2014 வரை இந்திய அணியில் விளையாடினார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இரண்டாவது வெற்றிகரமான விரைவு வீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் பரோடா அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார்.

2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் விளையாடிய 9 போட்டிகளில் 21 இலக்குகளை எடுத்தார். 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் விளையாட்டு விருதுகளில் இரண்டாவது பெரிய விருதாகக் கருதப்படும் அருச்சுனா விருதை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் பெற்றார்.

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 282 இலக்குகளை வீழ்த்தியுள்ள ஜாகிர் கான் அவர்களுக்கு இன்று(07-10-2020) பிறந்தநாள்!…

விரேந்திர சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜாகிர் கானுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …