இ(எ)துவும் கடந்து போகும் – ஹர்பஜன் சிங் உருக்கம்!…


இந்த 2020 ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் முதல் மேட்சில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி மற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி பெற்று தடுமாறி வருகிறது. இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர் ஹர்பஜன் சிங் இ(எ)துவும் கடந்து போகும் என உருக்கமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் ஐபிஎல் சீசனில் விளையாடாமல் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இ(எ)துவும் கடந்து போகும் என்னுடைய தோல்வியை ஒரு கூட்டமே கொண்டாடுகிறது ஆனால் என்னுடைய வெற்றியை ஒரு இனமே கொண்டாடும் என்பதை மறக்க வேண்டாம். மீண்டு வெற்றி முகம் காணும் போது அடிக்கும் அடி சம்பட்டி அடி ஆக இருக்கும். @ChennaiIPL திரும்பி வருவதை @IPL சரித்திரம் பேசும்.

இவ்வாறாக ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.