அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது…


கடந்த மார்ச் மாதத்தில் கொரானா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கி முடிவெடுக்கப்பட்டு,பயிற்சி வகுப்புகள் 7.10.2020 முதல் அண்ணா மேலாண்மை நிலையத்தில், தொடங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, உரிய சமூக இடைவெளி விடுதல், முகக்கவசம் அணிதல் ஆகிய முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளுடன் தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் போன்ற
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பயிற்சியாளர்கள்
அனுமதிக்கப்பட்டனர்.

இப்பயிற்சியினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பயிற்சித் துறை தலைவர், திரு.வெ.இறையன்பு இஆப, அவர்கள் காலை 10.30 மணியளவில் தொடங்கி வைத்தார். முதலில் அண்ணா மேலாண்மை நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அரசு அலுவலர்கள் பயிற்சி நிலையத்தின் சார்பில் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கான 19 நாள் அடிப்படை பயிற்சியும், அதே போன்று, பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களுக்கான ஒருநாள் நிர்வாகப் பயிற்சியும் இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர் திரு.எஸ்.ராஜேந்திரன்
அவர்களும், நிகழ்ச்சி இயக்குநர் திரு.எஸ்.பழனி அவர்களும், நிகழ்ச்சி மேலாளர் திரு.மு.சுந்தரராஜன் அவர்களும் இணைஇயக்குனர் திரு.சின்னுசாமி அவர்களும்,
அண்ணா மேலாண்மை நிலைய நிர்வாக அலுவலர் திரு.எம்.ஆர்.யுகேந்திரன் அவர்களும், சட்டப் பேராசிரியர் திரு.கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டனர். இவ்விரு பயிற்சிகளிலும், சுமார் 50 அலுவலர்கள் கலந்து கொண்டு
பயனடைந்தனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …