பணக்கார குடும்பமாக உருவெடுத்தது தான் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…


கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை- அமைச்சர் ஜெயக்குமார்!…

கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வழிக்காட்டுக் குழுவில் இடம் பெற்றதற்காக அமைச்சர் ஜெயக்குமாரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் ராமசந்திரன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, வழிக்காட்டு குழு உறுப்பினர் மோகன் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
திமுக பாஜக வுடன் கூட்டணி வைக்கலாம் என பொன் ராதாகிருஷ்ணன் கருத்திற்கு, அவரது தனிப்பட்ட கருத்திற்கு பதிலளிக்க முடியாது என்றும், பா.ஜ.க வின் சார்பில் மாநில தலைவர்கள், அகில இந்திய தலைவர்கள் தலைவர்கள் கருத்து கூறினால் மட்டுமே கருத்து கூற முடியும் என்றும், பொன் ராதாகிருஷ்ணன் கருத்து பா.ஜ.க கருத்தா என்பதை பா.ஜ க மேலிடம் தான் கூற வேண்டும், கூட்டணி தொடர்பாக பாஜகவில் ஆள் அளுக்கு கருத்து கூறுகிறார்கள், அதற்கெல்லாம் கருத்து கூற முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்த அவர், கொள்ளையடித்து தமிழகத்தை பாதாளத்திற்கு தள்ளியது திமுக தான் என்றும், பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்தது தான் அவர்களின் ஒரே சாதனை எனவும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்த திமுக இதுக்குறித்து கூறுவது வேடிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வழிக்காட்டு குழுவில் பெண்கள் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு. அகில இந்திய ரீதியில் பெண்களுக்கு உரிமை கொடுத்தது அதிமுக தான் என்றும், தேர்தல் நேரத்தில் பலக்குழுக்களை கட்சி அறிவிக்க உள்ளதாவகவும், அந்த குழுக்களை போடும்போது பெண்களுக்கு உரிமையளிக்கப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …