ஏன் மறந்தாய்?

உறக்கத்தில் வீழ்ந்தவனே,
உனக்கு இன்னும் எழ மனம் வரவில்லையோ,
நித்தமும் கணவுகள் மட்டும் காண்கிறாய்,
உந்தன் விழிகளை உறக்கத்திற்கு கடன்
கொடுத்து தான் கனவுகள் வாங்கினாயோ?
உழைக்க மறந்தவனே,
உனக்கேன்?
ஊதியம் மீது ஆசை!..
பிழைக்க
சிட்டுக்குருவிகள் கூட வட்டமிடும்!..
கட்டுடல்க் காளையன்றோ,
நீ ஏன் உழைக்க மறந்தாய்?