சக்தியே சிவம்!

மையிட்ட கண்ணுடையாள், நீ,
உலகறிய, மெய்யுரைத்தாய் ஒளவ்வையாய், நீ!

வளையிட்டக் கையுடையாள் நீ!
வேட்கையில் வாள் பிடித்தாய், நாச்சியாராய், நீ!

திலகமிட்ட நெற்றி உடையாள், நீ!…
முதல் மருத்துவரானாய், முத்துலட்சுமியாய், நீ!

சுடரொளி முகமுடைத்தாள், நீ
ரேடியம் அறிந்து நோபலடைந்தாய் மேரி கியூரியாய், நீ!

நவீன உலகின் நவநீதன தாய் நீ,
எண்டீவருடன் விண்ணில் ப(மறை)றந்தாய், நீ!

மங்கையர் குலப்பெருமை , நீ!
பெண்மையின் சாட்சியானாய் அன்னை தெரசாவாய், நீ!

அரசியல் களத்தில் சித்திரம் நீ,
முதல் பெண் பிரதமரானாய் இந்திராகாந்தியாய், நீ!

சரித்திரம் உரைத்தேன், நிகழ்காலம் சொல்லேனோ!…

என் தாய் நீயடி!
அன்புடைத்தாய், நற்குலம் படைத்தாய்,
தீதும், நன்றும் எனக்குரைதத்தாய்,
சொல்லில் அடங்கா வாழ்க்கையை எனக்களித்தாய்!…

என் தாரம் நீயடி!
என்னுள் பலமளித்தாய்,
மகிழ்ச்சி அமிர்தம் எனக்களித்தாய்,
என் சோர்வெறித்தாய் ,
என் கரை முடி ஒன்றும் காணோம்?
எனினும் என் வழிகோலாய் நீயிருந்தாய்!…

என் தமக்கை நீயடி!
வழி கொடுத்தாய்,,
அறிவுச்சுடரளித்தாய்,
சுற்றம் பல இருந்தும்,
என் சூத்திரம் நீயடி!…

என் மகளும் நீயடி!
பட்டாசு பறவை நீ,
பட்டாம்பூச்சியின் வடிவம் நீ,
என் அன்னையும் நீயடி,
அன்பால் பூச்சரம் படைத்தாய்,
உன் மொழியால் நற்தேனளித்தாய்!…

இமயம் உயரமெனின் பெண்ணே,
உனதருமை அதை விட பெரிது,
நிச்சயம் சொல்வேன்,
பெண்மை இன்றி,
அண்டமும் அன்று,
அதனாதாரமும் அன்று!…

சக்தியே சிவம்!