அறுவடை செய்வோம்!

கனவு என்னும் விதை விதைத்து
முயற்சி என்னும் உரமூட்டி,
கோபம் என்னும் களை பறித்து
பண்பென்னும் நீரூற்றி
அன்பென்னும் அரண் வளர்த்து,
இன்பமெனும் நெற்க்கதிரை
அறுவடை செய்வோம்!