மரம்!

வீசுகின்ற தென்றலனிலே,
ஆடுகின்ற கிளைகளெல்லாம்,
இலையுதிர செய்திடுமே,
கொளுத்தி வரும் வெயிலிலும்,
மரம் நிழல் தந்திடுமே,
கூடிவரும் பறவையெல்லாம்,
மரத்தில்தான் தங்கிடுமே,
காற்றில் கலந்த தூசி எல்லாம்
மரத்தில்தான் படிந்திடுமே,
வாழ்கின்ற காலம் எல்லாம்,
பயனைதான் தந்திடுமே,
விழுந்து விட்ட போதிலும்
மரப்பொருளாய் வந்து சேர்ந்திடுமே!

மரம் வளர்ப்போம்!… நன்னிலம் படைப்போம்!…