பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

இன்று (14.02.2020) சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் திரு.அதுல்ய மிஸ்ரா,இ.ஆ.ப., வருவாய் நிர்வாக ஆணையர்/முதன்மை செயலர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் முனைவர். D.ஜெகநாதன்,இ.ஆ.ப., சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநர் திரு.என்.வெங்கடாசலம்.இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *