மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (22.2.2020) தூத்துக்குடி நலத்திட்டங்களை துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (22.2.2020) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய் துறை மருத்துவ நேரியல் முடிக்கி கருவியின் (Linear Accelerator) சேவையினை துவக்கி வைத்து, பார்வையிட்டார்கள். உடன் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி திரு.என். தளவாய் சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (22.2.2020) தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், வீரபாண்டியபட்டணத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்து, மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்கள். உடன் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு. தம்பிதுரை, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஜி.கே. வாசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். சரத்குமார், தினத்தந்தி இயக்குதுர் திரு. சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆப், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆய், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (22.2.2020) தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரத்தில் புனித சூசை அறநிலைய ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு.என். தளவாய் சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் திரு.பி.சின்னப்பன், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் திரு.ஏ.சி. சண்முகம், தலைமைச் செயலாளர் திரு. க. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் புனித சூசை அறநிலைய நிர்வாகிகள் உள்ளனர்.