சோதனைகள் பெருகும் போது அதை எதிர் கொள்ள வேண்டும்

ஓர் இளம்பெண் தன் தந்தையிடமும் தாயிடமும் தினமும் வீட்டிற்கு வந்ததும் புலம்பிக் கொண்டேயிருந்தாரள். ஒரு பிரச்சினை முடிகிறது என்று நிம்மதியாக இருக்க முடிந்தால், உடனே அடுத்த பிரச்சினை தொடங்குகிறது என்று கவலைப்பட்டாள். அவளது பெற்றோர்கள் ஆறுதல் மொழிகள் கூறியும் அவள் மனம் அமைதி அடையவில்லை.

ஒருசமயம் மீண்டும் இதே மாதிரியாக அவள் புலம்பிக் கொண்டே இருந்ததை கண்ட அவளது தாய், அவளை சமையல் அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கே மூன்று பாத்திரங்களை எடுத்து அதில் பாதி தண்ணீரால் நிரப்பி விட்டு, ஒன்றில் சில கேரட்டுகளை போட்டாள், மற்றொன்றில் இரண்டு முட்டைகளை போட்டாள், மூன்றாவது பாத்திரத்தில் காபித் தூளை போட்டாள்.

மூன்று பாத்திரங்களையும் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தாள். சிறிது நேரம் கழித்து முடிந்ததும் மூன்று பாத்திரங்களையும் வெளியே எடுத்து வைத்தாள் தாய்.

முதல் பாத்திரத்தில் இருந்த கேரட் துண்டுகளை தொட்டு பார்க்குமாறு மகளிடம் சொன்னாள். அவள் அதை தொட்டுப் பார்த்தபோது அது இப்போது மிகவும் மிருதுவாக இருந்தது.

இரண்டாவது பாத்திரத்தில் இருந்த வேகவைத்த முட்டைகளை தொட்டுப் பார்க்கச் சொன்னாள், மகள் அவற்றை தொட்டுப் பார்த்தபோது இப்போது அவை கடினமாக இருந்தது.

மூன்றாவது பாத்திரத்தில் தொடுவதற்கு ஒன்றும் இல்லை, ஏனென்றால் அங்கிருந்த காப்பித்தூள் தண்ணீரில் கரைந்து, வாசனை தந்து கொண்டிருந்தது. மகள் அந்த வாசனையை முகர்ந்து பார்த்தாள்.

தாய் சொன்னாள்: கேரட்டுகள், முட்டைகள், காப்பித்தூள் மூன்றும் ஒரே நிலையில் தண்ணீரில் இடப்பட்டன. ஆயினும் இவை அவற்றின் தன்மையிலும் தண்ணீரோடு இணைந்து செல்வதிலும் வித்தியாசப்படுகின்றன. முதலில் கடுமையாக இருந்த கேரட்டுகள் மென்மையாக மாறிவிட்டன, மென்மையாக, திரவமாக இருந்த முட்டைகள் கடுமையாக விட்டன, நடுநிலையில் இருந்த காப்பித்தூள் தண்ணீரில் கலந்து விட்டன.

எனவே பிரச்சினைகள் வருகின்ற போது, அந்த பிரச்சனைகளை நீ எந்த மனநிலையில் பார்க்கின்றாய், என்பதைப் பொறுத்தும் எந்த வகையில் செயல்படுகிறாய் என்பதைப் பொருத்தும், அதன் விளைவுகள் உன்னாள் உணரப்படுகின்றன. நீ கேரட்டுகளாக இருக்கிறாயா?, முட்டையை போல் இருக்கிறாயா?. அல்லது காப்பித்தூள் போல் உள்ளாயா?, அது உன்னைப் பொறுத்தது. இதைக் கேட்டதும் மகளின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.

ஒவ்வொரு பிரச்சனையும் ஒவ்வொரு நிலையிலும் வேறுபடுகின்றது. வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும், பிரச்சினையாக பார்த்தால் வாழ்க்கையே பிரச்சினையாகி விடும். தொடர்ந்து பயணிக்கும்போது சவால்களை எதிர்கொண்டு, முன்னே செல்வது தான் புத்திசாலித்தனம். சில சமயம் வளைந்தும், நெளிந்தும், மேலும் சில சமயம் அமைதிகாத்தும் செல்ல வேண்டிய தருணங்கள் வந்துகொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *