கடற்கரை நகரம் – Part 4

இணைபிரியா நண்பர்கள்!..

இரவு சுபாவோடு பேசி , தனக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான், மதன்.

அடுத்த நாள் 11 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனில், தன் அறையில் உட்கார்ந்திருந்தான். சுபா அவங்க அப்பா, ஏதோ கடற்கரை பக்கத்துல வீடு வாங்கினதா சொன்னாள்.

நம்ப பிரண்ட்ஸ் அறிவும், பாண்டியும் கடற்கரை பக்கத்துல, கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட் வொர்க் பண்றதா சொன்னாங்க. ஆனால் அவர்களும் மூணு மாசமா காணோம். பாண்டியோட, அப்பா அம்மா தினமும் அவனை நினைச்சு அழுதுகொண்டே இருக்காங்க.

நிச்சயமா இந்த மூன்று பேரில் காணாமல் போனதற்கும் அந்தக் கடற்கரை வீட்டுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு. எதுக்கும் பாண்டியோட, அப்பா அம்மா கிட்ட எதுவும் விசாரிச்சா புதுசா, இன்ஃபர்மேஷன் எதுவும் கிடைக்கும்.

உடனே அவன் டிரைவர், கான்ஸ்டபிள் கணபதியை அழைத்தான், கணபதி வண்டியை எடுங்க அம்பத்தூர் வரைக்கும் ஒரு விசாரணைக்கு போகணும் என்றான்.

மதன், ஜீப்பில் ஏறி அமர்ந்ததும் கணபதி வண்டியை எடுத்தார். அதோட மதன் எதுவும் பேசாமல், தன் பால்ய நண்பர்களை பற்றி எண்ணத்தொடங்கினான்.

மதனின் எண்ணவலைகளோடு, நாமும், சற்று பின்னோக்கி, இக்கதையின் முக்கிய நபர்களான பாண்டி மற்றும் அறிவு பற்றி தெரிந்து கொள்வோம்.

திருவள்ளூர் பக்கத்தில் சின்ன கிராமம் அது, மதன், பாண்டி, அறிவு இவங்க மூன்று பேரும் நல்ல நண்பர்கள். மதன் அப்பா ஒரு லாரி டிரைவர், பாண்டியோட அப்பா ஒரு பிரைவேட் ஆபீசில் கணக்காளராக இருந்தாரு, நல்லா படிச்சவரு, கொஞ்சம் வசதியான குடும்பமும் கூட. அறிவுக்கு அப்பா கிடையாது, அவங்க அம்மாதான் கல்லு உடைச்சி அவனை படிக்க வச்சாங்க.

அறிவு ரொம்ப அமைதியான பையன், ஆனால் மதன் ரொம்ப வாலு. பாண்டியனும், மதனும், சின்ன சண்டை போடும் போதெல்லாம், அறிவுதான் சமாதானப்படுத்தினான்.

பத்தாவது வரைக்கும் மூணு பேரும் ஒண்ணாதான் படிச்சாங்க. ஆனா அதுக்கப்புறம் பாண்டியோட அப்பா அம்பத்தூரில் சொந்தமாக வீடு கட்டிட்டு செட்டில் ஆயிட்டாங்க. பாண்டி அம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல ஸ்கூல்ல 11வது, 12வது படித்தான்.

திருவள்ளூர் அரசுப் பள்ளியில் அறிவும், மதனும் 11வது 12வது படிச்சாங்க. ஆனால் பாண்டி குறிப்பிட்ட இடைவெளியில் வந்து அவங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு போவான்.

12th Exam-ல் மூணுபேரும் பாஸ். நல்ல மார்க் , அறிவு:- 1110, பாண்டி:- 1060, மதன்: 979.

பாண்டிய இஞ்சினியரிங் காலேஜ்ல சிவில் இன்ஜினியர் தேர்வு செய்தான், பாண்டியோட அப்பா உதவி செய்ததால அறிவும் அதே காலேஜில் சிவில் இஞ்சினியரிங் சேர்ந்தான். மதன் மட்டும் BA.அரசியல் படித்தான்.

இதை அசை போட்டுக் கொண்டிருக்கும்போது, கணபதி சார் அம்பத்தூரில் எந்த ஏரியா போகணும்னு கேட்டார்?.

அம்பத்தூர் ராக்கி தியேட்டர் பின்னாடி மூன்றாவது ரோட்டுக்கு போ என்றான் மதன். ஜீப் தெருவை நெருங்கியதும் அதோ அந்த மாருதி ஸ்விப்ட் முன்னாடி நிறுத்தும்படி கூறினான்.

மதன் ஜீப்பிலிருந்து இறங்கி அருகிலிருந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *