Author: Mahadevan M

மரம்!மரம்!

வீசுகின்ற தென்றலனிலே, ஆடுகின்ற கிளைகளெல்லாம், இலையுதிர செய்திடுமே, கொளுத்தி வரும் வெயிலிலும், மரம் நிழல் தந்திடுமே, கூடிவரும் பறவையெல்லாம், மரத்தில்தான் தங்கிடுமே, காற்றில் கலந்த தூசி எல்லாம் மரத்தில்தான் படிந்திடுமே, வாழ்கின்ற காலம் எல்லாம், பயனைதான் தந்திடுமே, விழுந்து விட்ட போதிலும் மரப்பொருளாய் வந்து சேர்ந்திடுமே! மரம் வளர்ப்போம்!… நன்னிலம் படைப்போம்!…

அறுவடை செய்வோம்!அறுவடை செய்வோம்!

கனவு என்னும் விதை விதைத்துமுயற்சி என்னும் உரமூட்டி,கோபம் என்னும் களை பறித்துபண்பென்னும் நீரூற்றிஅன்பென்னும் அரண் வளர்த்து,இன்பமெனும் நெற்க்கதிரைஅறுவடை செய்வோம்!

சக்தியே சிவம்!சக்தியே சிவம்!

மையிட்ட கண்ணுடையாள், நீ,உலகறிய, மெய்யுரைத்தாய் ஒளவ்வையாய், நீ! வளையிட்டக் கையுடையாள் நீ!வேட்கையில் வாள் பிடித்தாய், நாச்சியாராய், நீ! திலகமிட்ட நெற்றி உடையாள், நீ!…முதல் மருத்துவரானாய், முத்துலட்சுமியாய், நீ! சுடரொளி முகமுடைத்தாள், நீரேடியம் அறிந்து நோபலடைந்தாய் மேரி கியூரியாய், நீ! நவீன உலகின் நவநீதன தாய் நீ,எண்டீவருடன் விண்ணில் ப(மறை)றந்தாய், நீ! மங்கையர் குலப்பெருமை , நீ!பெண்மையின் சாட்சியானாய் அன்னை தெரசாவாய், நீ! அரசியல் களத்தில் சித்திரம் நீ,முதல் பெண் பிரதமரானாய்

ஏன் மறந்தாய்?ஏன் மறந்தாய்?

உறக்கத்தில் வீழ்ந்தவனே, உனக்கு இன்னும் எழ மனம் வரவில்லையோ, நித்தமும் கணவுகள் மட்டும் காண்கிறாய், உந்தன் விழிகளை உறக்கத்திற்கு கடன் கொடுத்து தான் கனவுகள் வாங்கினாயோ? உழைக்க மறந்தவனே, உனக்கேன்? ஊதியம் மீது ஆசை!.. பிழைக்க சிட்டுக்குருவிகள் கூட வட்டமிடும்!.. கட்டுடல்க் காளையன்றோ, நீ ஏன் உழைக்க மறந்தாய்?

பறந்திடு விண்ணைத்தாண்டிபறந்திடு விண்ணைத்தாண்டி

இமயம் என்ன உயரம், அதனால் இல்லை துயரம், சிறகுகள் விரிப்போம், காற்றினில் மிதப்போம், இலட்சியம் எதுவோ அதையே பிடிப்போம். விதி தட்டி பரித்தாலும் அதைஎட்டி பிடித்திடுவோம், சதி என்ன செய்தாலும் அதைமுட்டி தகர்த்திடுவோம், முடிவெடு தோழா உழைத்திட வெற்றி நம் கையில்கிடைத்திட நீலக்கடல் என்ன ஆழம்,அதனால் இல்லை ஓலம்,மூச்சினை பிடிப்போம், முத்துக் குளிப்போம்,செல்வங்கள் பலவும் வாறி எடுப்போம். விதி தட்டி பரித்தாலும் அதைஎட்டி பிடித்திடுவோம், சதி என்ன செய்தாலும் அதைமுட்டி

கடற்கரை நகரம் – Part 2கடற்கரை நகரம் – Part 2

இயற்கை அழகுதான்!.. அப்பா எங்க தான் இருக்கீங்க, உங்களுக்காக இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச பட்டுப்புடவை கட்டி வந்திருக்கேன். வாழ்க்கையில சாதிக்கனும் தனிமையை தேடி போன எனக்கு அந்தத் தனிமையை வெறுத்துப் போய் உங்க பாசத்துக்காக திரும்ப வந்து இருக்கேன் பா. நான் என்ன செய்ய அப்பா நீங்க எப்ப பேசினாலும் கல்யாணத்தை பத்தி பேசியதால் தானே உங்க கிட்ட பேசுறது அவாய்ட் பண்ண. இன்னையோட சரியா மூணு மாசம் ஆச்சு

கடற்கரை நகரம் – Part 1கடற்கரை நகரம் – Part 1

கடவுளின் படைப்பு மனிதன் என்பார் ஆன்றோர். அப்படியிருக்க மனிதன் தன் திறமையால் படைத்த படைப்புகள் தான் எத்தனை எத்தனை? சுய நலம் கருதியோ அன்று பொது நலம் விரும்பியோ இந்த மனிதன் செய்த காரியங்கள் தான் எத்தனை, அப்படியான ஒரு மனித பிரம்மாவை என் கதாநாயகனாக முன் மொழிந்து இக்கதையை தொடர்கின்றேன். மகாதேவன் முனியாண்டி வானத்து தேவதை மாலை நேரம் பொய்யா மழை பொழியும் என காத்திருந்த வேலையில், வானத்து