Category: General

தமிழகத்தில் இன்று 1,11,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; மொத்த உயிரிழப்பு 1500ஐ கடந்ததுதமிழகத்தில் இன்று 1,11,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; மொத்த உயிரிழப்பு 1500ஐ கடந்தது

தமிழகத்தில் இன்று 1,11,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு; மொத்த உயிரிழப்பு 1500ஐ கடந்தது தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,07,001லிருந்து 1,11,151ஆக அதிகரிப்பு சென்னையில் இன்று 1,731பேர் கொரோனாவால் பாதிப்பு சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 66,519ல் இருந்து 68,254ஆக உயர்ந்தது தமிழகத்தில் இன்று கொரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510ஆக அதிகரிப்பு இன்று ஒரே

தன்வந்திரி ரதம்: அகமதாபாத்தில் கோவிட் அல்லாத சுகாதாரச் சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கே எடுத்துச் செல்லுதல்தன்வந்திரி ரதம்: அகமதாபாத்தில் கோவிட் அல்லாத சுகாதாரச் சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கே எடுத்துச் செல்லுதல்

தற்போது நிலவி வரும் கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில், அகமதாபாத் மாநகராட்சி தன்வந்திரி ரதம் என்ற பெயரில் நடமாடும் வேன் மூலமாக நகரத்தில் உள்ள மக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று கோவிட் அல்லாத பிற அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை வழங்குகின்ற ஒரு பிரத்யேகமான மற்றும் புத்தாக்கமான முன்மாதிரி செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. இந்த நடமாடும் வேன்களில் அகமதாபாத் மாநகராட்சியின் நகர சுகாதார மையத்தில் இருந்து உள்ளூர் மருத்துவ அதிகாரியும் அவருடன் ஒரு ஆயஷ் மருத்துவர், துணைமருத்துவப் பணியாளர்

உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்றுக்கு இடையே, புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் உரை.உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் அழித்துக் கொண்டிருக்கும் பெருந்தொற்றுக்கு இடையே, புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் உரை.

உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் பெருந்தொற்று அழித்துக் கொண்டிருக்கும் நிலையில்,  புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன என குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார். மக்கள் மகிழ்ச்சியைக் காண, பேராசை, வெறுப்புணர்வு, வன்முறை, பொறாமை மற்றும் பல தீய குணங்களைக் கைவிட வேண்டும் என்று புத்த பகவான் கேட்டுக்கொண்டார். இந்த போதனைக்கு மாறாக, கவலை ஏதுமற்ற வேட்டை உணர்வுடன் மனித குலம் அதே பழைய வன்முறையைக் கையாண்டு, இயற்கையை அவமதிக்கிறது. கொரோனா தொற்றின் வீரியம் குறையத்  துவங்கும் போது, நம் முன்பு மிகத்

இமாச்சலப் பிரதேச முதலமைச்சருடன் மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஆலோசனைஇமாச்சலப் பிரதேச முதலமைச்சருடன் மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஆலோசனை

இமாச்சலப் பிரதேசத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், அம்மாநில முதலமைச்சர் திரு.ஜெய்ராம் தாகூருடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை முன்னேற்றும் வகையில், அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் இந்திய அரசு உயர் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. கிராமப்புற வீடுகள் அனைத்துக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் இயக்கத்தை 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற

லடாக்கில் உள்ள லே பொது மருத்துவமனையின் வசதி நிலை குறித்து இந்திய ராணுவம் தெளிவுபடுத்துகிறதுலடாக்கில் உள்ள லே பொது மருத்துவமனையின் வசதி நிலை குறித்து இந்திய ராணுவம் தெளிவுபடுத்துகிறது

பிரதமர் திரு நரேந்திர மோடி  ஜூலை 03, 2020 அன்று லேவில் உள்ள பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்த போது பார்வையிட்ட மருத்துவமனை வசதியின் நிலை குறித்து சில பகுதிகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் அபிப்ராய பேதங்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன. இந்த 100 படுக்கைகளுடன் உள்ள மருத்துவ வசதி, நெருக்கடி காலத்தில் விரிவாக்கப்பட்டதில் ஒரு பகுதியாகும், இது பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 நெறிமுறைகளின் படி பொது மருத்துவமனையின் சில

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, சுவாமி விவேகானந்தருக்கு அவருடைய மறைந்த தினத்தில் அஞ்சலி செலுத்தினார்மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, சுவாமி விவேகானந்தருக்கு அவருடைய மறைந்த தினத்தில் அஞ்சலி செலுத்தினார்

சுவாமி விவேகானந்தர் ஒரு தேசபக்த துறவி, சிறந்த சிந்தனையாளர் மற்றும் முன்மாதிரியான சொற்பொழிவாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா புகழாரம் சூட்டியதுடன், அவர் இந்தியாவில் தேசியவாத உணர்வை வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், உலகம் முழுவதையும் இந்திய கலாச்சாரத்தின் நெறிமுறைகளால் வளப்படுத்தினார். சுவாமி விவேகானந்தர் மறைந்த தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்திய திரு அமித்ஷா, ஒரு சுட்டுரையில், “கல்வி குறித்த எண்ணங்கள், உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் சுய விழிப்புணர்வு பற்றிய சுவாமி விவேகானந்தரின் பேச்சுகள் இன்றளவும் யாராலும் மறுக்க முடியாமல் உள்ளது” என்று கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் “சுவாமி விவேகானந்தர்

சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார்சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் இந்திய செயலிகளைக் கண்டறிந்து, அந்தந்தப் பிரிவுகளில் உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில், அவற்றின் ஆற்றலை அளவிடுவதில் கவனம் செலுத்தும் சுயசார்பு இந்தியா புத்தாக்க சவால் செயலியை தொடங்கி வைத்தார். ‘’ உலகத்தரம் வாய்ந்த மேட் இன் இந்தியா செயலிகளை உருவாக்குவதில் , தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் இடையே பெரும் ஊக்கம் தற்போது காணப்படுகிறது. அவர்களது

தங்கக் கடன் பத்திரத் திட்டம் 2021 (வரிசை IV) வெளியீட்டு விலைதங்கக் கடன் பத்திரத் திட்டம் 2021 (வரிசை IV) வெளியீட்டு விலை

மத்திய அரசு அறிவிக்கை எண் No. F.No.4(4)-B/(W&M)/2020 13 ஏப்ரல் 2020 தங்கக் கடன் பத்திரங்கள் 2021 வரிசை IV) ஜூலை மாதம் 6 முதல் 10 தேதி வரை திறந்திருக்கும். இதற்கான செட்டில்மென்ட் தேதி 14 ஜூலை 2020. இந்திய ரிசர்வ் வங்கி 3 ஜூலை 2020 அன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ள படி, இந்தப் பத்திரத்தின் வெளியீட்டு விலை சந்தா காலத்தில் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4852 ( நாலாயிரத்து ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தியிரண்டு மட்டும்) ஆகும் மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியைக் கலந்தாலோசித்த பிறகு இந்த திட்டத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மின்னணு முறை மூலமாக பணம் செலுத்துபவர்களுக்கு 50 ரூபாய் (ஐம்பது ரூபாய் மட்டும்) தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது. இதுபோன்ற முதலீட்டாளர்களுக்கு வெளியீட்டு விலை

சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய தளர்வுகள் உடன் மளிகைகடைகள் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமிசென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய தளர்வுகள் உடன் மளிகைகடைகள் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முதலமைச்சர்எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா

மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு- முதல்வர் எடப்பாடி பழனிசாமிமதுரையில் ஜூலை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முதலமைச்சர்எடப்பாடி k பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்தில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்