Category: General

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது- முதலமைச்சர் இரங்கல்.நெய்வேலி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது- முதலமைச்சர் இரங்கல்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K பழனிசாமி இரங்கல் செய்தியில்… கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையம்-2ல், அலகு-5ல் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று இன்று (1.7.2020) காலை திடீரென வெடித்த விபத்தில், ஆறு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தான் மிகுந்த மன வேதனை அடைந்தாக முதல்வர் தெரிவித்துள்ளார். கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,

சென்னை பெரியமேடு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்சென்னை பெரியமேடு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்

சென்னை பெரியமேடு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் கோயம்புத்தூர், தர்மபுரி சேலம் ,மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடநும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.அடுத்த

மருத்துவர் தின நல்வாழ்த்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமிமருத்துவர் தின நல்வாழ்த்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் உயிர்காக்கும் மருத்துவர்களின் கடமையை பாராட்டி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்த நாளான ஜூலை மாதம் முதல் நாள் மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கரோனா தொற்று பரவாமல் காத்திட இந்நாளில் நாடு முழுவதும் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் செயற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் தொழில்கள் யாவும் முடங்கியதால் வேலையின்மை அதிகரித்து, அடித்தட்டு நடுத்தர வர்க்கம் வருவாய் ஈட்ட வழியேதுமில்லாது அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி பரிதவித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தினால் ஏற்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு நாட்டு மக்களை மொத்தமாய்

உயிர் காக்கும் உன்னத பணி! மருத்துவர் தின நல்வாழ்த்து – துணை முதல்வர்உயிர் காக்கும் உன்னத பணி! மருத்துவர் தின நல்வாழ்த்து – துணை முதல்வர்

உயிர் காக்கும் உன்னத பணியான மருத்துவ பணியை மனமுவந்து மேற்கொண்டுவரும் மருத்துவர்களை சிறப்பிக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நன்னாளில், அனைத்து மருத்துவர்களுக்கும் எனது “மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை” அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவிற்கு எதிரான அறப்போராட்டத்தில் மருத்துவர்களின் பங்கு அளப்பரியது. கொரோனா சூழலிலும் தன்னலம் கருதாது இரவுபகல் பாராமல் அர்ப்பணிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

மருத்துவர்களுக்கு வாழ்த்து – சீமான்மருத்துவர்களுக்கு வாழ்த்து – சீமான்

கொரோனா பரவல் தடுப்புப் பெரும்போரில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் உடலையும், உயிரையும் துச்சமெனக் கருதி மக்கள் உயிர்காக்க அரும்பாடாற்றி வரும் மருத்துவத்துறையைச் சேர்ந்த பெருந்தகைகள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

உலக மருத்துவர்கள் தினம்!! – வாழ்த்தும் நடிகர் விவேக்உலக மருத்துவர்கள் தினம்!! – வாழ்த்தும் நடிகர் விவேக்

இன்று உலக மருத்துவர்கள் தினம்!! மருத்துவத்தைத் தொழிலாக மட்டுமன்றி சேவையாகவும் பார்க்கும், நடமாடும் தெய்வங்களான மருத்துவர்கள் அனைவருக்கும், இக் கொரானா காலத்தில், என் நன்றியும் வாழ்த்தும்!! நடிகர் விவேக்