Category: General

சென்னை மாநகர் முழுவதும் கரோனா நோய்த்தொற்றை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.சென்னை மாநகர் முழுவதும் கரோனா நோய்த்தொற்றை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

சென்னை மாநகர் முழுவதும் பரிசோதனையை அதிகரித்து கொரோனா நோய்த்தொற்றை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை திரு.வி.க நகரில் அமைந்துள்ள மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், முழு அடைப்பு காலத்தை பயன்படுத்தி 30 நிரந்தர சோதனை மையம் மற்றும் 10 நடமாடும் சோதனை மையம் மூலமாக பொதுமக்களின் சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையங்களுக்கு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறை அமல்படுத்த திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறை அமல்படுத்த திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழக்கூடும் என்பதால், இந்த ஆண்டு மட்டும் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறையை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , இன்று காலை முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்தார். 15 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய

அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு – முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள்25.6.2020 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும்அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள். மேலும், அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து, 26.6.2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல் 25 கோடி மதிப்பில், பயோ கேஸ் உற்பத்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் நாமக்கல் 25 கோடி மதிப்பில், பயோ கேஸ் உற்பத்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்தும் , மத்திய பெட்ரோலியம் , இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுடில்லியிலிருந்தும் இன்று காணொலிக் காட்சி மூலமாக , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் நாமக்கல்லில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள Compressed Bio Gas ( CBG ) தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகளையும் , நாமக்கல் , சேலம்

குடும்ப அட்டை தாரர்களை ரேஷன் கடைக்கு வரவழைக்க கூடாது.குடும்ப அட்டை தாரர்களை ரேஷன் கடைக்கு வரவழைக்க கூடாது.

வீட்டிலேயே நேரில் சென்று நிவாரண நிதி 1000 ரூபாயை வழங்க வேண்டும்.தவரும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும-தமிழக அரசு சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தகுதியுடைய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ .1000 / – ரொக்கம் வீட்டிற்கு சென்று விநியோகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன் படி நேற்று முதல் 1000 ரூபாய் பணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு

மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம்- தமிழக அரசுமதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம்- தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்… மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் ஐஏஎஸ் மாற்றப்பட்டு உள்ளார்.அவருக்கு பதிலாக புதிய கரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  தர்மேந்திர பிரதாப் ராமநாதபுரம் மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக சிறைத்துறையை பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறை மற்றும் சீர்திருத்தத்துறை என்று இனிமேல் அழைக்கப்படும்தமிழக சிறைத்துறையை பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறை மற்றும் சீர்திருத்தத்துறை என்று இனிமேல் அழைக்கப்படும்

தமிழக சிறைத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறைகள் தண்டனை அனுபவிக்கும் இடமாக மட்டும் இல்லாமல், கைதிகள் திருந்தி வாழ வழிவகுப்பதோடு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் இடமாகவும் உள்ளது. பார்வையாளர்களை சந்திப்பதற்கு மட்டுமல்லாமல் கைதிகள் தங்கள் உறவினர்களோடு போனில் பேசுவதற்கும் தற்போது வசதிகள் உள்ளன. இதுபோன்ற நல்வாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், தமிழக சிறைத்துறையை பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறை மற்றும் சீர்திருத்தத்துறை என்று இனிமேல் அழைக்கப்படும். மேலும்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்.திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்.

கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபடும் அரசின் மீது பழிபோடுவதை ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும்.இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் சொன்னதில் என்ன தவறு உள்ளது.முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர், ஸ்டாலினுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வரும். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால், தமிழகத்தில் கொரோனா பரவியது என்றும் அதிமுக அரசு தான் கரோனாவை தோற்றுவித்தது போல தினமும்

டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம்டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம்

டெல் கணேசன் தயாரிப்பில், நடிகர் நெப்போலியனின் நடித்த முதல் ஆங்கிலப் படம் ‘டெவில்ஸ் நைட்’ இன்று டிஜிட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியாகிறது. விரைவில் உலகெங்கும் வெளியாக உள்ளது. ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் பரபப்பான திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி விறுவிறுப்புக் குறையாமல் இயக்கியிருக்கிறார். ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் ஆகியோரின் இயல்பான

கர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு மத்திய அரசு பாராட்டுகர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு மத்திய அரசு பாராட்டு

தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கும்,வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதற்கும் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலானகர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு மத்திய அரசு பாராட்டு கோவிட்-19 மேலாண்மையில்,  கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கும்,  நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, வீடு வீடாக சென்று ஆய்வு செய்வதற்கும், கர்நாடக அரசு பின்பற்றி வரும் சிறந்த நடைமுறைக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.  இந்த நடைமுறை மூலம், கர்நாடகாவில் இதுவரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  பல்துறை அமைப்புகளின் பங்கேற்புடன்,  தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் தலையீடுகளின் ஒத்துழைப்புடன்  ‘ஒட்டுமொத்த அரசு’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசு, இந்த இரண்டு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.   தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்புடையவர்களைத் திறம்படக் கண்டறிவதன் மூலம், நோய்த் தொற்று பரவுவது வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த சிறந்த நடைமுறையை, மற்ற மாநிலங்களும், தத்தமது உள்ளூர் நிலைமைக்கேற்ப பின்பற்றி ,  கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில்  சிறப்பாகச் செயல்படுமாறு, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில்,  தொற்று பாதிப்புடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவது தான் பெரும் சிக்கலாக இருப்பதுடன், சுகாதாரக் கட்டமைப்புகளுக்குப் பற்றாக்குறை ஏற்படாதவாறு உறுதிசெய்ய வேண்டும்.   மத்திய அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ள படி, அதிக ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்து உடைய தொடர்புகளை இணைத்திருப்பதன் மூலம், கர்நாடக அரசு,  ‘தொடர்பு’ என்பதற்கான விளக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.   கர்நாடகாவில்,  முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை,  மிகச்சரியாகக் கண்டறியப்பட்டு,  அனைவரும் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டனர்.  மாநில அரசால் வரையறுக்கப்பட்டபடி,  தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பொறுப்பு நன்கு பயிற்சி பெற்ற 10,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மூலம் படிப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.   பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிவதற்கான செல்போன் செயலி மற்றும் இணையதள செயலிகள் பயன்படுத்தப்படுவதால்,  பணிச்சுமை குறைவதோடு,  உண்மையான  நேர்மையானவர்கள் உண்மையாகவே மறந்து போயிருந்தாலோ அல்லது பல்வேறு காரணங்களால் மறைக்க முயற்சிப்பவர்களையும் கண்டறிய முடிகிறது.  அதிக பரப்பளவைக் கொண்ட மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளுக்குத்  தொற்று பரவுவதையும், அம்மாநிலத்தில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.   குடிசைப் பகுதிகள் அல்லது அதுபோன்ற இடங்களில் வசிக்கும்,  பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களை, அரசு ஏற்பாட்டிலான கட்டாயத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியதன் மூலமே இது சாத்தியமாயிற்று.  கர்நாடகாவிற்கு திரும்புவோர் மற்றும் அம்மாநிலத்திற்கு வரும் பயணிகள் “சேவா சிந்து”  வலைதளத்தில் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கியிருப்பதால், சம்பந்தப்பட்ட நபர், அடுத்த சில தினங்களுக்கு, அவரது வீடு அல்லது அரசு தனிமைப்படுத்துதல் மையத்தில் இருக்கிறாரா என்பதை மாநில அரசு அறிந்து கொள்ள முடிகிறது. தனிமைப்படுத்துதலை முறையாக நடைறைப்படுத்துவதில்,   “தனிமைப்படுத்துதல் கண்காணிப்புச் செயலி” களப் பணியாளர்களுக்கு உதவிகரமாக உள்ளது.   வீட்டில் தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்த,  சமுதாயப் பங்கேற்புடன் கூடிய நடமாடும் குழுக்களையும், அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.    தனிமைப்படுத்தப்பட்ட நபர், அதனை மீறுவதாக, பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்தோ அல்லது பொது மக்களிடமிருந்தோ, தகவல் வரப்பெற்றால்,   சம்பந்தப்பட்ட நபர், அரசு தனிமைப்படுத்துதல் மையத்திற்கு மாற்றப்படுகிறார்.   எளிதில் பாதிப்பு ஏற்படக்கூடிய மூத்தகுடிமக்கள், இணை நோய்கள் உடையோர், குளிர்காய்ச்சல் போன்ற பாதிப்பு உடையோர்,  கர்ப்பிணிகள் மற்றும்  கடுமையான மூச்சுத்தினறல் பாதிப்பு உடையவர்களைக் கண்டறிந்து,  முன்னுரிமை அடிப்படையில்,  அவர்களைப் பாதுகாத்து சிகிச்சை அளிக்க ஏதுவாக,  கர்நாடக அரசு, நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ வீடுவீடாகவும் ஆய்வு நடத்துகிறது.  இதுபோன்ற ஆய்வு மே 2020-இல் தொடங்கப்பட்டு,  மொத்தமுள்ள 168 லட்சம் வீடுகளில்,  இதுவரை 153 லட்சம் வீடுகளில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.    சுகாதார ஆய்வுச் செயலி மற்றும் வலைதளச் செயலிகளைப் பயன்படுத்தி, தேவையான தகவல்களைச் சேகரிக்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   இதுபோன்று சேகரிக்கப்படும் தகவல்கள்,  ஏற்கனவே சுகாதாரத்துறையிடம் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், காசநோய், எச்.ஐ.வி., சிறுநீரக டயாலிசிஸ் மற்றும் புற்று நோயாளிகள் பட்டியல் மூலம் சரிபார்க்கப்படுகிறது.   நாஸ்காம் அமைப்பின் ஒத்துழைப்புடன், மாநில  அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆப்தமித்ரா எனப்படும் தொலைபேசி ஆலோசனை உதவி எண் (எண்.14410-க்கு அழைக்கலாம்)  மூலமும், பதிவு செய்யப்பட்ட குரல்கள் அல்லது நேரடியாகவும் விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படுகிறது.   ஒரு வீட்டில் யாருக்காவது  கோவிட்-19 அறிகுறி தென்படுவதாகத் தகவல் தெரிவித்தால், அந்த நபர், மருத்துவர்களால் தொலைமருத்துவ முறையில் பரிசோதிக்கப்பட்டு,  தொடர் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.   சுகாதாரக் களப்பணியாளர்  ( ASHAs) சம்பந்தப்பட்ட வீட்டிற்கு நேரடியாகச் சென்று தகவல்களை உறுதி செய்வதோடு,  தேவையான சுகாதார சேவைகளும் வழங்கப்படுகிறது.