Category: General

WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 151WHO: Coronavirus disease (COVID-19) Situation Report – 151

The hydroxychloroquine arm of the Solidarity Trial, which seeks to find an effective COVID19 treatment, is being stopped. The decision is based on evidence from the Solidarity Trial, the UK’s Recovery trial and a Cochrane review of other evidence on hydroxychloroquine. Data shows that hydroxychloroquine does not result in the

Coronavirus disease (COVID-19) advice for the public: Myth bustersCoronavirus disease (COVID-19) advice for the public: Myth busters

Can people wear masks while exercising?  People should NOT wear masks when exercising as masks may reduce the ability to breathe comfortably. Sweat can make the mask become wet more quickly which makes it difficult to breathe and promotes the growth of microorganisms. The important preventive measure during exercise is to maintain physical

COVID-19 Tamilnadu status – 19-06-2020COVID-19 Tamilnadu status – 19-06-2020

Tamil Nadu. Two private labs (PrimeGen Healthcare LaboratoriesPrivate Limited, Nanaganallur, Chennai & Suriyaa Diagnostics, 81,Broadway main road, Chennai) have been approved for COVID-19 testingtoday. 54,449 persons have tested positive till date. 7,72,937 sampleswere tested negative. Testing of 594 samples are under process. Death in Private health facilities without comorbiditiesDeath Case

கொவிட்-19 நோய்தொற்றைக் கண்டறிவதற்கான விலை மலிவான சோதனைக் கருவிகளை ஐஐடி குவஹாத்தி உருவாக்கியுள்ளது.கொவிட்-19 நோய்தொற்றைக் கண்டறிவதற்கான விலை மலிவான சோதனைக் கருவிகளை ஐஐடி குவஹாத்தி உருவாக்கியுள்ளது.

நூதன கொரோனா வைரஸ் தொற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு துல்லியமான சோதனை முக்கியமானதாகும். இது தொடர்பான முயற்சிகளை குவஹாத்தி இந்திய தொழிநுட்பக்கழகம் முன்னெடுத்துச் சென்று, ஆர்.ஆர் விலங்கு சுகாதார பராமரிப்பு நிறுவனம், மற்றும் குவஹாத்தி மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை (ஜி.எம்.சி.எச்) ஆகியவற்றுடன் இணைந்து நோய்த் தொற்றைக் கண்டறியும் மலிவு விலையிலானகருவிகளை உருவாக்கியுள்ளது. இவை வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியம் (விடிஎம்) கருவிகள், ஆர்டி-பிசிஆர் கருவிகள் மற்றும் ஆர்என்ஏ தனிமைப்படுத்தும் கருவிகளாகும். வி.டி.எம் கருவிகள் என்பது நோய்த்தொற்றை முதலில் கண்டுபிடித்துத் தடுக்கும் சாதனமாகும். இதனைப் பயன்படுத்தி மூக்கு மற்றும் வாய் வழியாக மென்மையான துணியால் மாதிரிகளை ஒரு தனிப்பட்ட நபரிடமிருந்து சேகரித்து,  பாதுகாப்பாக ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று திசுக்கள், கிருமிகள் பராமரிப்பு மற்றும் சோதனைக்காக பயன்படுத்தப்படும். இந்தக் காலகட்டத்தில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் மாதிரிகள்,

ஏசி காற்று குழாய்கள் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், ஏசி ரயில் பெட்டிகள் பொருத்தமானதல்ல 5231 ஏ.சி அல்லாத ரயில் பெட்டிகளை தனிமை பெட்டிகளாக இந்திய ரயில்வே மாற்றியுள்ளதுஏசி காற்று குழாய்கள் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், ஏசி ரயில் பெட்டிகள் பொருத்தமானதல்ல 5231 ஏ.சி அல்லாத ரயில் பெட்டிகளை தனிமை பெட்டிகளாக இந்திய ரயில்வே மாற்றியுள்ளது

கொவிட்-19 சிகிச்சை அளிக்கும் திறனை அதிகப்படுத்துவதற்காக, இந்திய ரயில்வேத்துறை 5231 ஏ.சி அல்லாத ரயில் பெட்டிகளை தனிமை பெட்டிகளாக மாற்றியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழி காட்டுதல்கள்படி, கொவிட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நோயாளிகளையும், கொவிட் நோயாளிகளையும் பராமரிக்கும் மையங்களாக இந்த ரயில் பெட்டிகள்  மாற்றப்பட்டுள்ளன.        மத்திய சுகாதாரத்துறை மற்றும் நிதி ஆயோக் உருவாக்கிய ஒருங்கிணைந்த கோவிட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வசதிகள் உள்ளன. மாநிலங்களில் உள்ள படுக்கை வசதிகளில் நோயாளிகள் நிறைந்த பின் இவற்றை பயன்படுத்த வேண்டும். இந்த ரயில் பெட்டியை காற்றோட்டமுள்ள, இயற்கை வெளிச்சம் உள்ள இடங்களில் பயன்படுத்த வேண்டும். குளிர்சாதன வசதி அளிக்கப்பட்டால், அது குழாய் வழி ஏ.சியாக இருக்ககூடாது. கொவிட் நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் முன்பே, ஏ.சி விஷயம் குறித்து நிதி ஆயாக் மற்றும் மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசிக்கப்பட்டது. ஏ.சி காற்று குழாய்கள் மூலம் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், ஏ.சி பெட்டிகள் பொருத்தமாக இருக்காது என முடிவு செய்யப்பட்டது. கோவிட் வைரஸை எதிர்த்துப் போராட, அதிகளவிலான வெப்பநிலை தேவை. மேலும் திறந்த ஜன்னல்கள் மூலமான காற்றோட்ட வசதி நோயாளிகளுக்கு பலன் அளிக்கும்.     உயர் நிலைக்குழு-2 உத்தரவுப்படியும், விருப்பப்படியும், இந்த தனிமை ரயில் பெட்டிகள், கோவிட் பராமரிப்பு மையங்களாக செயல்படும். மிதமான மற்றும் அதிகமிதமான அல்லது தொற்று இருக்கலாம் என  சந்தேகப்படும் கொவிட் நோயாளிகளுக்கு, இந்த ரயில் பெட்டிகளை பயன்படுத்தலாம்.     மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தயாரித்த கோவிட் ரயில் விதி முறைப்படி, கோவிட் ரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு அருகேயுள்ள பிளாட்பாரத்தில் ஒரு அவசர சிகிச்சை மையம் சுகாதாரத்துறையினரால் அமைக்கப்பட வேண்டும்.  ரயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு இறுதியில், பொருட்களை மாற்றுவதற்கான அறைவசதி செய்யப்பட வேண்டும். நிரந்தரமாக இந்த வசதி இல்லை என்றாலும், தற்காலிக ஏற்பாட்டில் இந்த வசதி வழங்கப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள படுக்கை வசதிகளில், நோயாளிகள் நிறைந்த பின்பே, இந்த ரயில் பெட்டி வசதிகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகள் ஜூலை மாத மத்தியில் தான் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான், நோய்பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. AC COACHES NOT SUITABLE IN VIEW OF THE

உள்நாட்டுத் தேவைக்குப் போதிய அளவு / உபரியாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்.உள்நாட்டுத் தேவைக்குப் போதிய அளவு / உபரியாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்.

மலேரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட்ராக்சி குளோரோ குயின்,  செயல்திறன் மிக்க மருந்துப் பொருள்கள் மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்,  மருந்தியல் துறை, வெளியுறவுத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய, அமைச்சகங்களுக்கு இடையிலான உயரதிகாரமளிக்கப்பட்ட குழு  03.06.2020 அன்று நடத்திய ஆலோசனையின் அடிப்படையில்,  ஹைட்ராக்சி குளோரா குயின் (செயல்திறன்மிக்க மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகள்)  மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்குமாறு, மருந்தியல் துறை பரிந்துரைத்திருந்தது.  அதன் பேரில்,  வெளி வர்த்தகத்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தடை நீக்கம் தொடர்பான முறையான அறிவிப்பை  நேற்று (18.06.2020)  வெளியிட்டுள்ளது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது,   மார்ச் – மே, 2020 காலகட்டத்தில் (கோவிட்-19 காலகட்டம்) ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2-லிருந்து 12-ஆக  அதிகரிக்கப்பட்டதுடன், நாட்டின் மொத்த ஹைட்ராக்சி குளோரோ குயின் உற்பத்தித் திறனும்,  மும்மடங்காக, அதாவது,  ஒரு மாதத்திற்கு  10கோடி ( சுமார்) மாத்திரைகளிலிருந்து 30 கோடி (சுமார்)  மாத்திரைகளாக உயர்த்தப்பட்டது.    தற்போது, இந்தியா, உள்நாட்டுத் தேவையை விட உபரியாக ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளது.  கோவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனத்திற்கு, 200 மில்லி கிராம் சக்திகொண்ட 12.22 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கியிருப்பதன் மூலம்,  மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்ப நலத்துறையின் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.   தற்போது,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிடம், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய தேவையான அளவை விட உபரியாகவே,  ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள்  இருப்பு உள்ளது.   இது தவிர,  200 மில்லி கிராம் சக்தி கொண்ட 7.58கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள்  மாநில அரசுகள்,  பிற நிறுவனங்கள் மற்றும்  மத்திய அரசின் மருந்துப்பொருள் தயாரிப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு / மக்கள் மருந்தகங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விநியோகிக்கப்பட்டுள்ளது.   மேலும்,  உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, 200 மில்லி கிராம் திறன்கொண்ட 10.86 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள், உள்ளூர் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.  ஆக மொத்தம்,   30.66 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் (200மி.கி. திறன் கொண்டவவை) நாட்டின் உள்நாட்டு சந்தைத் தேவைக்கு வழங்கப்பட்டுள்ளன.   எனவே, உள்நாட்டு ஹைட்ராக்சி குளோரோ குயின்  மாத்திரைத் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.  அத்துடன்,  ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளைத் தயாரிக்கும் பெரிய உற்பத்தியாளர்கள்,  2020 ஜுன் மாதத்தில் , உள்நாட்டுச் சந்தைக்கு 5 கோடி மாத்திரைகளை விநியோகிக்க உள்ளனர்.   இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரியும், உள்நாட்டுச் சந்தையில், ஹைட்ராக்சி குளோரோ குயின் மற்றும் பிற மருந்துப் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.    25 மற்றும் 26 மே,  2020-இல் நடத்தப்பட்ட மாதிரி ஆய்வில், கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள மருந்துக் கடைகளில், 93.10 சதவீதம் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் இருப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.  எனவே,   ஹைட்ராக்சி குளோரோ குயின்  (செயல்திறன்மிக்க மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகள்) மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனினும், அதே வேளையில்,  ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பிரிவுகள் தவிர்த்த ஹைட்ராக்சி குளோரோ குயின் உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள்,   அவற்றின் மொத்த உற்பத்தியில் 20 சதவீத மாத்திரைகளை உள்ளூர் மருந்துக்கடைகள் மற்றும் உள்ளூர் வர்த்தகத்திற்கு விநியோகிக்க வேண்டும்.   இது  2020 ஜுன் மாதத் தேவையைவிட அதிகம் ஆகும்.    மாநில அரசுகள்,  எச்.எல்.எல்.நிறுவனம் மற்றும் பிற பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத்  தேவையான அளவை விட அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது.  எனவே, அனைத்து உற்பத்தியாளர்களும்,  எச்.எல்.எல். நிறுவனம், மாநில அரசுகள் அல்லது அரசின் பிற நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மாத்திரைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும்.   இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு,  இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.  

தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி திட்டம் துவக்கம். தற்சார்பு இந்தியாவிற்கான முயற்சிதெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி திட்டம் துவக்கம். தற்சார்பு இந்தியாவிற்கான முயற்சி

பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமர் ஸ்வநிதி) திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்காக – இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமையாக இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) நியமிக்கப்பட்டுள்ளது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று புது தில்லியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) ஆகியவை கையெழுத்திட்டன. அமைச்சகத்தின் சார்பில் அமைச்சகத்தின் துணைச் செயலர் திரு சஞ்சய்குமார், சிட்பியின் துணை நிர்வாக இயக்குனர் திரு. வி.சத்திய வெங்கட்ராவ், மத்திய வீட்டுவசதி

ஏ.எல்.ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்ஏ.எல்.ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‌… தமிழ்நாட்டு மக்களை தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், பிரபல குணச்சித்திர நடிகை திருமதி எம்.என் ராஜம் அவர்களின் அன்பு கணவருமான திரு.ஏ.எல் ராகவன் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தாக முதல்வர் எடப்பாடி

வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு, ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்க உத்தரவு- தலைமைச் செயலாளர் சண்முகம்.வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு, ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்க உத்தரவு- தலைமைச் செயலாளர் சண்முகம்.

வரும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு E – Pass தேவையில்லை.ஹால் டிக்கெட்டுகளையே E – Pass ஆக கருதி தேர்வு எழுத அனுமதிக்க டி.ஜி.பி.க்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 24-ம் தேதி நடைபெறும் ஹைதராபாத் IIIT-இன் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை பெருநகர சென்னை ஆணையர் செய்து தர உத்தரவிட்டுள்ளார்.

‘வருவாய் நிர்வாக ஆணையராக பனீந்திர ரெட்டி நியமனம்’ – தமிழக அரசு ஆணை.‘வருவாய் நிர்வாக ஆணையராக பனீந்திர ரெட்டி நியமனம்’ – தமிழக அரசு ஆணை.

தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்… வருவாய் நிர்வாக ஆணையராக பனீந்திர ரெட்டி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் சுகாதாரத்துறை செயலராக நியமிக்கப்பட்டதால் மாற்றம். கே.பனிந்திர ரெட்டி, ஐ.ஏ.எஸ்., முதன்மை செயலாளர், ஆணையாளர், இந்து மத மற்றும் தொண்டு ஆஸ்தித் துறைஇடமாற்றம் செய்யப்பட்டு வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து மத மற்றும் அறக்கட்டளைத் துறையின் பதவியை மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிப்பார். பங்கஜ் குமார்