Category: Stories

கல்மரம் (திலகவதி)கல்மரம் (திலகவதி)

இலவசமாக |  இ – புத்தகம் https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1208 “காசு வச்சிங்கிறயாம்மா?” என்று தூக்கம் கலையாத குரலில் கேட்டபடியே பாயில் புரண்டு படுத்தான் காசி. சுள்ளென்று அடித்த வெயில் அவன் முகத்தில் உறைத்தது. சற்று முன் வீடு வந்து சேர்ந்த ஆதிலட்சுமி, அவள் வேலை செய்கிற வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த பழைய சோறு குழம்பு, காய் கறிகளையெல்லாம் வீட்டுப் பாத்திரங்களுக்கு மாற்றிக்கொண்டிருந்தாள். “யமோவ்” என்று குரல் கொடுத்தபடி வீட்டுக்குள் வந்தாள்

அச்சமின்மையே ஆரோக்கியம்!அச்சமின்மையே ஆரோக்கியம்!

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது. அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார். அவனுடைய

அப்பா……..அப்பா……..

சக்திவேல் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் சக்திவேல். வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் சக்திவேலின் பக்கத்தில்வந்து

புரட்சி கவிஞர் பாரதிதாசனின் “அழகின் சிரிப்பு”புரட்சி கவிஞர் பாரதிதாசனின் “அழகின் சிரிப்பு”

1. அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்!மாலையிலே மேற்றிசையில் இலகு கின்றமாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ்சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்தனில் அந்த ‘அழகெ’ ன்பாள் கவிதை தந்தாள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;திருவிளக்கிற் சிரிக்கின்றாள், நாரெடுத்துநறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில்நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோட்புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்நிறத்தினிலே என் விழியை நிறுத்தினாள்;

தண்ணீர் தேசம் (கவிஞர் வைரமுத்து)தண்ணீர் தேசம் (கவிஞர் வைரமுத்து)

1 கடல்…உலகின் முதல் அதிசயம்.சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜம். கடல்…ஒருவகையில் நம்பிக்கை.ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்தகலைவண்ணன் மடியில்கிடந்ததமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம்.சிறகுகளைந்து சுடிதார்கொண்டசொப்பனதேவதை. ரத்தஓட்டம்பாயும் தங்கம் அவள் தேகம்.பொறுக்கி எடுத்த உலகஅழகுகளை நெருக்கித் தொடுத்தநேர்த்தியான சித்திரம். குமரிவயதுகொண்ட குமரி அவள். அவன் அழகன். இளைய அறிஞன்.காதலிக்கும்போதும் கம்பீரம்குறையாதவன். என்ன யோசனை?என்றாள் தமிழ்.கலைவண்ணன் மனதுகரையேறியது. இந்தச் செவிட்டுக் கரைகளோடுஅந்த அலைகள் இத்தனையுகங்களாய் அப்படி என்னதான்பேசும்

மை தீட்ட வா – Part 1மை தீட்ட வா – Part 1

உருக் கொடுத்து, அதில் உயிர் கொடுத்து, கல்வி தனமளித்து, இன்றளவும் என்னை, அன்பால் சுமந்து கொண்டிருக்கும், என் தாய், தந்தை, ருக்மணி, முனியாண்டி அவர்களுக்கு என்னுடைய கோடானக் கோடி நன்றிகள்!… முன்னுரை: மொழியின், முதுகெலும்பு எழுத்துக்கள். மனிதன், தன் தொடர்பு பாலத்தை நீட்டிக்க தொகுத்த குறியீடுகளின், தொகுப்புதான் கடிதம். மலை இடுக்குகளில் கீறலாய், பனை ஓலைகளில் கோடுகளாய், அவசர அழைப்பு, தந்தியாய், ஒற்றை பத்தியில் அஞ்சல் அட்டையாய், சற்றே நீண்டு

கண்கள் சொல்லும் காயங்கள்கண்கள் சொல்லும் காயங்கள்

கண்கள் சொல்லும் காயங்கள்,நெஞ்சின் ஓரம் ஈரம் தான்,வாழும் மனிதர்களுக்குள்ளே எத்தனை எத்தனை மாற்றங்கள்,ஒருவன் வாழவேண்டும் என்று,மற்றவன் சாவது எந்த விதத்தில் நியாயமாகும்? படைத்தவனா பிரித்து வைத்தான்?,உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வைத்தான்?மதங்கள் என்னும் பெயராலே,மதம் பிடித்து கொல்ல வைத்தான்? சுயநலம் பிடித்த மனிதா நீ,இறைவனை காரணம் காட்டாதே!