Category: Stories

கடற்கரை நகரம் – Part 4கடற்கரை நகரம் – Part 4

இணைபிரியா நண்பர்கள்!.. இரவு சுபாவோடு பேசி , தனக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான், மதன். அடுத்த நாள் 11 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனில், தன் அறையில் உட்கார்ந்திருந்தான். சுபா அவங்க அப்பா, ஏதோ கடற்கரை பக்கத்துல வீடு வாங்கினதா சொன்னாள். நம்ப பிரண்ட்ஸ் அறிவும், பாண்டியும் கடற்கரை பக்கத்துல, கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட் வொர்க் பண்றதா சொன்னாங்க. ஆனால் அவர்களும் மூணு மாசமா காணோம். பாண்டியோட, அப்பா அம்மா

சோதனைகள் பெருகும் போது அதை எதிர் கொள்ள வேண்டும்சோதனைகள் பெருகும் போது அதை எதிர் கொள்ள வேண்டும்

ஓர் இளம்பெண் தன் தந்தையிடமும் தாயிடமும் தினமும் வீட்டிற்கு வந்ததும் புலம்பிக் கொண்டேயிருந்தாரள். ஒரு பிரச்சினை முடிகிறது என்று நிம்மதியாக இருக்க முடிந்தால், உடனே அடுத்த பிரச்சினை தொடங்குகிறது என்று கவலைப்பட்டாள். அவளது பெற்றோர்கள் ஆறுதல் மொழிகள் கூறியும் அவள் மனம் அமைதி அடையவில்லை. ஒருசமயம் மீண்டும் இதே மாதிரியாக அவள் புலம்பிக் கொண்டே இருந்ததை கண்ட அவளது தாய், அவளை சமையல் அறைக்கு அழைத்துச் சென்றார், அங்கே மூன்று

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய ”சந்திரிகையின் கதை”மகாகவி சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய ”சந்திரிகையின் கதை”

முதல் அத்தியாயம் பூகம்பம் பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும். இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம் அதாவது பிராமணர் வீதி, இருந்தது. அந்த அக்ரஹாரத்தில்

பெரும் வாய்ப்பை இழந்த முட்டாள் தானே!பெரும் வாய்ப்பை இழந்த முட்டாள் தானே!

ஒரு ஆடு மேய்ப்பவர்க்கு நிலத்தில் ஒரு பளபளப்பான கல் கிடைத்தது. அந்த கல்லை விவசாயிடம் கொடுத்துவிட்டு ஒரு படி அரிசியை வாங்கிக்கொண்டார், அந்த ஆடு மேய்ப்பவர். அந்த விவசாயி அந்த கல்லை ஒரு வியாபாரியிடம் கொடுத்து 50 ரூபாய்க்கு தேவையான மளிகை சாமான் வாங்கிக்கொண்டு சென்றார். கல் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அதை தன் மளிகை கடையில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அந்த வியாபாரி. தன்

ஔவையார் நூல்கள்: 4. நல்வழிஔவையார் நூல்கள்: 4. நல்வழி

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல். சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி.

மரம்!மரம்!

வீசுகின்ற தென்றலனிலே, ஆடுகின்ற கிளைகளெல்லாம், இலையுதிர செய்திடுமே, கொளுத்தி வரும் வெயிலிலும், மரம் நிழல் தந்திடுமே, கூடிவரும் பறவையெல்லாம், மரத்தில்தான் தங்கிடுமே, காற்றில் கலந்த தூசி எல்லாம் மரத்தில்தான் படிந்திடுமே, வாழ்கின்ற காலம் எல்லாம், பயனைதான் தந்திடுமே, விழுந்து விட்ட போதிலும் மரப்பொருளாய் வந்து சேர்ந்திடுமே! மரம் வளர்ப்போம்!… நன்னிலம் படைப்போம்!…

அறுவடை செய்வோம்!அறுவடை செய்வோம்!

கனவு என்னும் விதை விதைத்துமுயற்சி என்னும் உரமூட்டி,கோபம் என்னும் களை பறித்துபண்பென்னும் நீரூற்றிஅன்பென்னும் அரண் வளர்த்து,இன்பமெனும் நெற்க்கதிரைஅறுவடை செய்வோம்!

சக்தியே சிவம்!சக்தியே சிவம்!

மையிட்ட கண்ணுடையாள், நீ,உலகறிய, மெய்யுரைத்தாய் ஒளவ்வையாய், நீ! வளையிட்டக் கையுடையாள் நீ!வேட்கையில் வாள் பிடித்தாய், நாச்சியாராய், நீ! திலகமிட்ட நெற்றி உடையாள், நீ!…முதல் மருத்துவரானாய், முத்துலட்சுமியாய், நீ! சுடரொளி முகமுடைத்தாள், நீரேடியம் அறிந்து நோபலடைந்தாய் மேரி கியூரியாய், நீ! நவீன உலகின் நவநீதன தாய் நீ,எண்டீவருடன் விண்ணில் ப(மறை)றந்தாய், நீ! மங்கையர் குலப்பெருமை , நீ!பெண்மையின் சாட்சியானாய் அன்னை தெரசாவாய், நீ! அரசியல் களத்தில் சித்திரம் நீ,முதல் பெண் பிரதமரானாய்

ஏன் மறந்தாய்?ஏன் மறந்தாய்?

உறக்கத்தில் வீழ்ந்தவனே, உனக்கு இன்னும் எழ மனம் வரவில்லையோ, நித்தமும் கணவுகள் மட்டும் காண்கிறாய், உந்தன் விழிகளை உறக்கத்திற்கு கடன் கொடுத்து தான் கனவுகள் வாங்கினாயோ? உழைக்க மறந்தவனே, உனக்கேன்? ஊதியம் மீது ஆசை!.. பிழைக்க சிட்டுக்குருவிகள் கூட வட்டமிடும்!.. கட்டுடல்க் காளையன்றோ, நீ ஏன் உழைக்க மறந்தாய்?