Month: August 2020

ஒரே பாரதம்!.. உன்னத பாரதம்!..ஒரே பாரதம்!.. உன்னத பாரதம்!..

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனமும், இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனமும் இணைந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தன. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பணியாற்றி வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும் தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தயாரிப்புத் தொழில்நுட்ப சபையில் இணைந்துள்ள மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனமும், இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனமும் இணைந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு 2020 மே 8ஆம் தேதி முதல் 2020 ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ஏற்பாடு செய்திருந்தன. ஒரே பாரதம் உன்னத பாரதம் நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:2020 மே மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், 32 இணை மாநிலங்களில் 6141 பேர் பங்கேற்ற 27 நிகழ்ச்சிகளை நடத்தியது. 2020 ஜூன் மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள், 26 இணை மாநிலங்களில் 4167 பேர் பங்கேற்ற 52 நிகழ்ச்சிகளை நடத்தியது. 2020 ஜூலை மாதத்தில் 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை  நிறுவனங்கள் 26 இணை மாநிலங்களில் 2966 பேர் பங்கேற்ற 17 நிகழ்ச்சிகளை நடத்தியது.2020 ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை 20 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் 26 இணை மாநிலங்களில் 20 நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டிருந்தது.  இதுவரை 5 மத்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் நிகழ்ச் சிகளை நடத்தியுள்ளன. அவற்றின் அறிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 15 நிறுவனங்களுக்கான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.  இந்தியச் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனம் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” திட்டத்தின் கீழ் “ஆன்லைன் தேசிய கவிதை மற்றும் வாசிப்புப் போட்டிகளுக்கு ” ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான பதிவுகள் நாடெங்கும் தொடங்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் தங்கள் இயற்றிய கவிதைகளையம் அவற்றின் வாசிப்பு அடங்கிய வீடியோக்களையும் அனுப்பியுள்ளனர். இவற்றின் மீதான தீர்ப்பு கவிதைகளின் கருத்துக்கள், மொழி நடை, கவிதைகளின் அசல் தன்மை மற்றும் கவிதை வாசிப்புச் சிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.

திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்…திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்…

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயா்நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை

கரோனா, இ-பாஸ், இரண்டாவது தலைநகரம் குறித்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதில்கள்…கரோனா, இ-பாஸ், இரண்டாவது தலைநகரம் குறித்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதில்கள்…

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் முறையை ரத்து செய்ய முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் அதனை அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்… சென்னை பட்டாளத்தில் உள்ள கரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி உதயகுமார் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 381 ஆவது வயதை கடந்த சென்னை மாநகரத்துக்கு

2019ஆம் ஆண்டுக்கான வீர , தீர செயலுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது2019ஆம் ஆண்டுக்கான வீர , தீர செயலுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது

ஆர். ஸ்ரீதருக்கு வீர , தீர செயலுக்கான 2019 – ஆம் ஆண்டுக்கான “ ஜீவன் ரக்ஷா பதக் ” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 நபர்களை மீட்டதற்காக , தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதருக்கு வீர

குழந்தைகள் முக கவசம் கட்டாயம் – WHOகுழந்தைகள் முக கவசம் கட்டாயம் – WHO

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டிப்புடன் கூறி உள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கொரோனா தென்கொரியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் லெபனானில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இதனை அடுத்து 12 வயது

IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் – முதல்வர் வாழ்த்து!IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகள் – முதல்வர் வாழ்த்து!

2019-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான K. பூரணசுந்தரி மற்றும் பாலநாகேந்திரன் ஆகியோரை பாராட்டி, நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்து- முதல்வர் எடப்பாடி பழனிசாமி… தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 2019-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த K. பூரணசுந்தரி மற்றும் சென்னை

அரசு இசைக் கல்லூரி கட்டடம் திறப்பு…அரசு இசைக் கல்லூரி கட்டடம் திறப்பு…

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 1.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம் திறப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k. பழனிசாமி கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மதுரை மாவட்டம், பசுமலை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் மற்றும் கோயம்புத்தூர்

கோவிட்-19 தற்போதைய தகவல்கள்கோவிட்-19 தற்போதைய தகவல்கள்

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், இந்தியாவில் குணமடைவோர் விகிதம், ஏறத்தாழ 75 சதவீதமாக அதிகரித்துள்ளது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் குணமடைந்தோர் எண்ணிக்கை, ஏறத்தாழ 16 லட்சமாக அதிகரித்துள்ளது நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மரணம் அடைபவர்களின் விகிதம் உலக அளவில் ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது இது மேலும் குறைந்துள்ளது கோவிட் நோயிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் இந்த நோயிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 75 சதவீதம் அதிகரித்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் 57 ஆயிரத்து 989 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்

திரைப்படத் தயாரிப்புக்கான நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்…திரைப்படத் தயாரிப்புக்கான நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்…

திரைப்படத் தயாரிப்புக்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்… திரைப்படத் தயாரிப்புகள் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் உள்ள சூழ்நிலையில், தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கி, தொடரும் போது, திரைப்படத் தயாரிப்பில் தொடர்புடைய பல்வேறு துறையினரும், நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் மேற்கொள்ள

நட்பெனும் காவியம்நட்பெனும் காவியம்

அன்னையின் ஓரன்பே மன்னையின் பேரன்பே அரசியலெனும் களமாடலில் ஆரிய வர்க்கம் அன்னையை சூழ்ந்து நின்ற துராேகம் பலதை.., உம் கூரிய திறன் காெண்டு தடுத்து நின்றவரே.., உங்கள் சீரிய சிந்தனையால்பேரியியக்க அசாத்திய தலைமையை நிறுவிய நிஜமான நிழல்தலைமையே.., பகை திரண்ட பாேதும் சரி… இருள் சூழ்ந்த பாேதும் சரி… உம் அரண் தாண்டி அம்மாவின் மூச்சுக்காற்றை கூட தாெட்டதில்லையம்மா., விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும்.,தனிமரமாய் தாயை காத்த தாயே., எவரிடமும் கெஞ்சாமல்